தேடலும் தொலைதலும்!
Apr 18, 2026,02:57 PM IST
- மொழிப்பித்தன் இரா.ச. குமார்
நீயென்னவோ
இயல்பில்தான் இருக்கிறாய்
நான்தான் ஏனோ
கலைந்தும் தொலைந்தும் போகிறேன்...
-
உன் பார்வையிலிருந்து தப்பிக்கவே முயற்சி
தப்பிக்கும் விதம் குறித்து சொல்லிப்போயேன்...
-
முயற்சி யாவும்
பலனளிக்காதென்பதை அறிவதில் தாமதம் தொடர்கிறது
சரி அதுவரை அடிக்கடி உன் பார்வையில் சிக்கி
நான் சித்ரவதைக்குள்ளாகவா?...
-
அடிக்கடி
உன் பார்வையால்
நீ எதையோ தேட
நான்
தொலைகிறேன்...
-
உன் பார்வைக்கு
வராமலிருப்பதற்கான ஏற்பாடு எதுவும் என்னிடமில்லை
காரணம் உன் பார்வையில் விழுந்து தொலைதல் பிடித்தமானதாகிப் போனது...
-
இன்னொன்று
என்னை
நீ தேடுவாயென்றால
சொல்
தொலைந்து தொலைந்துப்போகிறேன்!