மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!

Su.tha Arivalagan
Sep 21, 2026,12:25 PM IST

- கவிஞர் செ.வெண்ணிலா


பெயர் என்பது அறிவதற்கு மட்டுமல்ல

அர்த்தத்திற்கும் தான்

பெருந்தலைவர் காமராசர்

காலை உணவுத்திட்டம் என்ற பெயர்

அந்த அர்த்தத்தை அள்ளித் தந்தது.


காலை உணவு மாணவர்களுக்கு

புன்னகையோடு உந்திச்சென்று

உள்ளென்று பசியாறும் பேருணர்வு

மனதிற்கும் உடலுக்குமான

நல்பரிந்துணர்வு ஒப்பந்தம்




கண்களை சிமிட்டி பேசி

கைகளால் உணவை எடுத்து

கண  நேரத்தில் கரைசேரும் தென்றல் போல

பசியாற்றும் காலை உணவு

தினந்தோறும் மாணவர்களின்

முகங்களில் மலர்ச்சி காணும்

எனது கண்கள் தவம் கோடி

நிச்சயம் செய்திருக்கும்


அம்மா ஆறு மணிக்கே வேலைக்குச் சென்றார்


அப்பா வாரம் கழித்துத்தான் வருவார்

உணவு .....சமைத்து கொடுக்க யார்?

இருக்கிறதே நம் பெருந்தலைவர்

காமராசர் காலை உணவுத்திட்டம்


அந்த அன்னையின் கைமணம்

என் அன்னையை நினைக்கத் தோன்றுமே

என்கிறது பிள்ளைகள் மனம்


மிளகு பொங்கல் வாசம்

மிடுக்காய் பரவி வீசும்

பலகாய்கறி சாம்பார்

படக்கென பசி தூண்டும்

மஞ்சள் நிற கிச்சடி

மங்களமாய் பசியாற்றும்

அரிசி உப்புமாவோ

அள்ளி அள்ளி ருசிக்கத் தூண்டும்

தித்திப்பு கேசரி

என் வெள்ளிக்கிழமை சகோதரி

ஆஹா.... எத்தனை ருசி

என் அம்மா சொல்கிறாள்


ம்ம்...நாங்கெல்லாம் படிக்கும்போது

எங்கே இப்படி உணவு கிடைத்தது

நீ பாக்கியசாலி என்று


ஆம் அம்மா

நான் கொடுத்து வைத்தவள்தான்

தமிழக அரசின் இந்த அருமையான திட்டங்களால்

என்று நன்றி கூறி மகிழும்

பள்ளிக் குழந்தைகளின் உள்ளங்கள்...


(கவிஞர் செ வெண்ணிலா B.Sc .,M.A., B.Ed. இடைநிலை ஆசிரியர், ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆவடி)