குஜராத்தின் குணமே குணம் நின்ற மனமே!

Su.tha Arivalagan
Oct 02, 2026,04:33 PM IST

- செ. வெண்ணிலா


படித்த பாடம் காந்தி

குஜராத்தின் குணமே

குணம் நின்ற மனமே

மனம் வென்ற மனித

மனித!


மணக்கும் உன் புனிதம்..

புனித உன் பொறுமை

பொறுமைப் பேசும் திறமை

திறமைக் கொண்ட கடமை

கடமை

கடலா ! 




அது காற்றலையா..

காற்றலையாய்ப் போர்கள்

போர்கள் தந்த சிறைகள்

சிறைகளே விதைகள்

விதைகள்!


தந்ததே விடுதலை விருட்சம்....

விருட்சமாய் அகிம்சை

அகிம்சை தரித்த அறங்கள்

அறங்கள் கண்ட களங்கள்

கலங்கடித்ததே அந்நியப்பிழைகள்...

பிழைகள் நீங்க உழைத்தாய்


உழைத்தாய் உண்ணவோ மறுத்தாய்

மறுத்தே மக்களைக் காத்தாய்

காத்தாய்!


வழியானதே! வெற்றிக்கொடியானதே...

கொடி பறக்கச் செய்தாய்

செய்ய தினம் நடந்தே சென்றாய்


சென்ற தூரம் உலகை

வலமும் வந்தது

வளமும் தந்தது....

வளம் கொழிக்கும் நாட்டில்

நாட்டின் வறுமை நீங்க

நீங்களே நெசவு செய்தீர்


நெய்த ஆடை தரித்தீர்

எளிமை அதில் வளர்த்தீர்...

வளர்த்து கண்ட பாதை

பாதை தந்த மேதை

மேதைப் படித்த கீதை

கீதை!


அதை நீ படித்தீர்

உமை நாம் படித்தோம்....

படித்த பாடம் காந்தி

மனம் அறிந்தது சாந்தி....


(கவிஞர் செ வெண்ணிலா B.Sc .,M.A., B.Ed. இடைநிலை ஆசிரியர். ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆவடி)