காந்தி ஜெயந்தித் திருவிழா!

Oct 02, 2026,03:25 PM IST

- கவிஞர் மல்லிகா செல்வராஜ்


எல்லா வளங்களும் கொட்டிக் கிடந்த 

வல்லிய தேசமாம் நம் தாய்நாடு!!

மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் 

பயன்படுத்தி தன்வசப்படுத்தினரே..

பரங்கியர்கள்!!


தந்திர நரிகளாய் நமை ஆண்டவர்களை

"வந்தே மாதரம்" என முழங்கி

தன் மந்திர அகிம்சையால் இயங்கி

காந்தித் தாத்தா வாங்கித் தந்த 

தங்கப் பரிசாம் நம் சுதந்திரம்!!🌷




சட்டம் படித்த மேதையாம்

பட்டம் கொடுத்தது நல் பதவியாம்!!

பத்திய உணவு உட் கொண்டு

வத்திய உடல் படைத்திருந்தாலும்,

மனதில் உறுதி கொண்டு

சத்திய சோதனை வழங்கிட்டாரே!!


சிறு வட்டந்தனில் சிக்கிவிடாமல்..

நாட்டின் பெருவளம் காத்த அண்ணலாம்!!

அம்மகானின் அவதாரத் திருநாளாம் 

இன்று அவர் பாதம் பணிந்திடுவோம்!!

அவர் புகழ் போற்றிடுவோம்!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்