நீதி ஆட்சியில்!
- செ. வெண்ணிலா
சின்ன சின்ன பிஞ்சுகளை சீரழிக்கும் சீமான்களை
சிதைத்து வதைத்து தீயிலிட வேண்டும்
உனக்கென ஓர் உலகம்
உனக்கென சட்டதிட்டம்
நீ உல்லாசப்பட
ஊரார் பிள்ளைகளில்
நீ காட்டிய வெறியாட்டம்
ஆகப்போகிறாய் தரைமட்டம்
உனக்கு தைரியம் தந்தது யாரடா?
நீ ஊதியம் சம்பாதிக்க
சின்ன பிஞ்சுகளை பொசுக்குவதா
பொறுக்கமாட்டாள் பூமித்தாய்
மனித மிருகம் நீ
உன்னைப் போவ் இன்னும் எத்தனை பேரோ
நீதி ஆளும் பூமியடா நம் தமிழ் மண்
சாது மிரண்டது
இனி காடு கொள்ளாது
காட்டுத்தீயில் நீ அழிவாய்
நீதித் தீயில் நீ எரிவாய்
வசைபாடும் அத்தனை வார்த்தைகளுக்கும்
பொருந்தும் இழி ஜென்மங்களை
புதைத்தாலும் பூமித்தாய் கூனிக்குறுகுவாள்
எரித்தாலும் வாயுதேவி
வாடிப் போவாள்
இனியும் பொறுக்க வேண்டாம்
வீறுகொண்டு எழுவோம்
பொசுங்கிய தடம்தெரியாமல்
இந்த நீதியின் ஆட்சியிலே....!
(கவிஞர் செ வெண்ணிலா B.Sc .,M.A., B.Ed. இடைநிலை ஆசிரியர். ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆவடி)