விண்ணில் தந்திடும் வாழ்வில் உயர்வை!

Su.tha Arivalagan
Oct 06, 2026,04:17 PM IST

- சகாயதேவி


மண்ணில் சிந்திடுவாய் தினம் வியர்வை 

விண்ணில் தந்திடும் வாழ்வில் உயர்வை 


உழைக்கும் உழைப்பாளியின் முகவரி வியர்வை

உழைப்பாளியின் கடைநிலை அடையாளம் வியர்வை 

உழைப்பாளியின் உடல் வாசனை வியர்வை 


களைத்தவனின் உடலில் பனித்துளியாய் வியர்வை ஊற்றெடுத்து ஓடும் 

ஆறாய் வியர்வை சாறெடுத்து பிழிந்த சக்கையாய் உழைப்பாளி


ஆறுபோல் அனுதினம் ஓடுகிறான் உழைப்பாளி

கடல் சேரும் நாள் என்றோ உழைப்பாளி 

கடன் சேரும் நாள் இன்றே உழைப்பாளி 

காசு சேரும் நாள் என்றோ உழைப்பாளி 

கனவுகள் கூடும்  நாள் என்றோ 

கஷ்டம் சேரும் நாள் இன்று உழைப்பாளி




வளமை வந்து சேரும் நாள் என்றோ உழைப்பாளி

நீரில் குளித்த தாமரை குளத்தில் 

வியர்வையில் குளித்த தாமரை என் உழைப்பாளி 


வேர்களால் விடுபட முடியா உழைப்பாளி 

தாமரைப் பூவை அர்ச்சனைக்கு எடுத்து வருவது யாரோ 

உழைப்பாளியின் வாழ்வை உயர்த்துவது யாரோ 


சேற்றிலிருந்தும் சோர்விலிருந்து விடுபட முடியா உழைப்பாளி 

கார்முகிலை  நம்பி வாழும் உழைப்பாளி


கானத்தோடு வாழ்வை கலந்தவன் 

வியர்வையின் தோழன் உழைப்பாளி 

வியர்வையின் நாயகன் விசித்திர நாயகா விவசாய நாயகா 

வாழ்க்கை உயருமா