வைகறைப் பொழுதினிலே

Su.tha Arivalagan
Aug 10, 2026,04:55 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


விடிவெள்ளி கண்டேன் 

விழி திறந்த போது 


பூபாளம் இசைக்கும் புண்ணியப்பொழுது

ஆழ்கடலின் அடியிலிருந்து 


ஆதவன் கிழக்கே எழத் தொடங்கும் சிறுகாலைப்பொழுது

இருள் விலகும் அந்நேரம்


உழவனின் உயிர் அங்கு  நடை போடும் 

வயல்வெளி நாற்றுகள் சதிராடும் 


கொட்டிக் கிடக்கும் பவளமல்லி 

மணம் பரப்பும் நிலம் தனிலே 


வீட்டுத் தோட்டத்தில் கூடு கட்டிய புள்ளினம் 

புதுமுழக்கம் எழுப்பபியே இசை பாடும் 




ஐந்துமணி எழுந்து அதிகாலையே குளித்து

இறையருள் கூடிடவே 


கேட்டிடும் பாடலில் மனம்  லயிக்கும்

சடுதியில் சடவுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பிறக்கும் .


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)