அவளுக்கென்று ஓர் ஆசை!

Su.tha Arivalagan
Oct 15, 2026,02:34 PM IST

- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை 


இருள் சூழ்ந்த மார்கழிப் பனியில் நனைந்திட ...

மலை சார்ந்த நடைபாதையில் ஆட்டம் போட்டிட....


பூத்த பூவில் வண்டு போல் தேனை  உறிஞ்சிட...  

புல்லின் நுனிப்பனியில் முகம் பார்த்திட...


ஓடுகின்ற நதியில் சிறுகூழாங்கல்லாய் உருண்டிட...

உச்சி கிளையில் ஆடும் மாங்கனியைக் கொத்தும் கிளியாய் மாறிட ...


சலனமில்லாக் குளத்தில் செந்தாமரையாய் மிதந்திட ...

பாறை இடுக்கிலும் ஈரம் கொண்டு வளரும் செடியாய் வளர்ந்திட...


ஆலமர விழுதில் ஒற்றைக் கையால் ஆடும் கவியாய்த் தொங்கிட....

கடல் அலையில் வந்து போகும் சிறு சங்காய் அலைந்திட...  




காலைக் கதிரவனின் செந்நிறமாய்க் கலந்திட ...

விண்ணின்று பொழியும் முதல் துளியை நாவில் ஏந்திட....


அன்னை மீனாளின் மடியில் கண் அயர்ந்திட....

இப்படி ஏராளம் ஆசைகள் அவளுக்கென்று ....


நிறைவேறுமா? நிஜமாகுமா?


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)