மதுரையின் மையம்!

Su.tha Arivalagan
Aug 21, 2026,12:46 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


நான் மாடக் கூடலிலே 

நாலு வீதி அழகோடு 

 

மேன்மையாய் அமைந்ததம்மா 

மீனாளின் கோவிலம்மா


பொற்றாமரைக் குள அழகும் 

பொன் கூரைப் புது அழகும் 


நெடுஞ்சுவரில் குறளழகும் 

சொல்வதற்கு வார்த்தை ஏது ?




திங்கள்தொறும் கோவிலே 

திருவிழாக் கோலம் பூணும் 


புது மல்லிச் சரத்தாலே 

புது மணமும் கூடும் 


ஆயிரங்கால் மண்டபமோ 

ஆயிரம் கதை கூறும் 


அருங்காட்சியகம் தனிலே 

அற்புதங்கள் தெரியும் 


திருவிளையாடற் காட்சிகளைக்

கற்சுவரும் காட்டும்


கயற்கண்ணி கருவறையில் 

கருணையே பொங்கும் 


பண்பாட்டின் அடையாளம் 

மீனாட்சி திருக்கல்யாணம்


சொக்கனுக்கு வலப்புறமே 

சொக்கி நிற்கும் அன்னையவள்  


என்னுள் நீ என்று 

எனக்கு எடுத்தியம்பும் ஜோதி அவள்!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)