உன் ஞாபகங்கள் வலிக்கின்றது!
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
இதயம் தொட்ட உன் முதல் பார்வை
கரம் பிடித்த உன் முதல் தொடுகை
பெற்ற பிள்ளையை நீ கொஞ்சிய முதல் தருணம்
நீ நட்டு வைத்த ரோஜா, தென்னை,
எலுமிச்சை, மா பூத்தபோது
தெரிந்ததே உன் முகம்
ஆசையாய் நீ அமைத்த துளசி மாடம்
கொட்டுகின்ற மழை கண்டால்
எனை அழைக்கக் குடையோடு
நீ வரும் நினைவு
நடைப்பயிற்சிப் பாதை கண்டால்
நீயும் நானும் நடந்தது நிழலாடும்
பார்த்துப் பார்த்து நீ செய்த ஊஞ்சல் கண்டால்
காணுகின்ற யாவுமே நீ
இருப்பினும் உன் ஞாபகங்கள் வலிக்கின்றதே!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)