Poem by Santhi Sinnathambi: மனசு!
Sep 03, 2026,11:24 AM IST
- செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை
இறுகிக் கிடக்கும் கற்பாறையா?
உறைந்து கிடக்கும் பனியா?
சுட்டெரிக்கும் சூரியனா?
சுடாத நிலவா?
மணம் பரப்பும் மலரா?
ஏற்றியவுடன் உருகும் மெழுகா?
தொட்டவுடன் சிணுங்கும் தொட்டாச் சிணுங்கியா?
வெடித்ததும் சிதறும் இலவம்பஞ்சா?
நொடிக்கு ஒரு தரம் நகரும் நிமிடமுள்ளா?
சலித்துப்போன பின் உதிரும் சருகா?
என் மனமே!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)