காலம் பொன் போன்றது
- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
இறந்த காலம் இனி வரப்போவதில்லை...
நிகழ்காலம் நிதர்சனம் தெரிவதில்லை...
எதிர்காலம் என்னவென்றே புரியவில்லை...
மூன்று காலங்களில் முட்டி மோதி விளையாடுகிறது நம் வாழ்க்கை ...
துயரங்களை ஆற்றுவதும் காலம் தான் ...
இன்பங்களைக் கூட்டுவதும் காலம் தான் ...
மாற்றங்களை உருவாக்குவதும் காலம் தான்....
மறதியைத் தருவதும் காலம் தான்...
ஒரு நொடி தாமதமானால் செல்லும் பயணம் தடைபட்டுப் போகும்...
அரை மணி நேரம் தாமதமானால் தேர்வுகளில் தேற முடியாமல் போகும்...
ஒரு நாள் தாமதமானால் பணி மூப்பில் பயனில்லாமல் போகும் ...
ஒரு ஆண்டு தாமதமானால் படிப்பே பயனற்றுப் போகும் ...
நிமிடமுள் யாருக்காகவும் எதற்காகவும் தன் ஓட்டத்தை நிறுத்துவதே இல்லை ...
நாட்காட்டியில் கிழிந்த பக்கங்கள் மீண்டும் வருவதில்லை ...
கடக்கின்ற காலமதும் கடனாகக் கிடைப்பதுண்டோ?
இருக்கின்ற காலமதில் வீணாக்காத வினை புரிதல்
நன்றே என்று செயல் புரிவோம் இன்றே!
போற்று!போற்று! பொன் போன்றகாலத்தைப் போற்று!
கூற்று! கூற்று!
இது முன்னோரின் பெருங்கூற்று!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)