சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!

Su.tha Arivalagan
Aug 17, 2026,03:53 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


இளமை!


கண்டதெல்லாம் பிடிச்சுப்போகும் ...


கள்ளமில்லா மனசு அலைபாயும்... 


நல்லதா கெட்டதா எனப்புரியாமல் தவிக்கும் ...


நல்லோர் சொல்லையும் நசுக்கிப் புறந்தள்ளும்...


காண்பதே நிஜமென்று  கனவுகளில் மிதந்து செல்லும் ...


-




குளிர்ச்சி


ஆயிரம் கவலைகள் மனதை எரித்திருந்தாலும் 


சில்லெனக் குளிர வைக்கும் 


அன்பு மழலை எச்சில் முத்தம்...


-


ஒரு சொல்


பல நூறு புத்தகம் படித்திருந்தாலும் 


பலர் பேசும் உரை கேட்டிருந்தாலும்


மாற்றத்தைத் தருவது 


 உள்ளம் தொடும் ஒரு சொல்...


-


ஞாபகம்


ரோஜாவாய்ப் பூத்திருந்தால் மணம்....


நெருஞ்சி முள்ளாய் இருந்தால் ரணம்...

        

-


ஆலமரம்


பிள்ளைகளின் ஊஞ்சல்.... பறவைகளின் இருப்பிடம்.... 


தீர்ப்பு கூறும் நீதிமன்றம்.... 


பாதசாரியின் பள்ளியறை...!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)