மூவரி கவிதைகள்.. சிறுமியின் சிரிப்பில் ஜவ்வு மிட்டாய் காளியின் நாவு

Su.tha Arivalagan
Jul 01, 2026,04:53 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


(1)


காகிதப் பூ

மணம் இல்லை

அன்பின் வண்ணம்


(2)


சோளக் காடு

பால் பிடிக்கும் மணம்

குருவி முன்னே அறியும்




(3)


சிறுமியின் சிரிப்பில் 

ஜவ்வு மிட்டாய் 

காளியின் நாவு


(4)


அழுத முகம்

சிரித்தது அதரம்

மூடிய மனம்


(5)


கொட்டின் சத்தம்

நினைவில் நிற்கும்

கொண்டவன்  இறுதிப் பயணம்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)