பாறையும் செடியும்!

Su.tha Arivalagan
Jul 24, 2026,03:36 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


பாறையும் செடியும் என்ற தலைப்பில் சசிகலா விஸ்வாதன் எழுதிய சில ஹைக்கூ கவிதைகள்


(1)


நெகிழ்ந்திட்ட  நடு பாறை

முளைக்கும் செடி

விரிந்த இலைகள்


(2)


நெக்கிட்ட பாறை

முளைக்கின்ற  பூண்டு 

நிமிரும் இலைகள் 


(3)



 

ஒரு பாறை கீறி

முளைக்கும்  பூண்டு

வெறும் பாறைகள் காண. 


(4)


சூரியன் பார்க்கிறான்

பாறை இடம் கொடுக்க

சிறு செடி முளைக்கிறது


(5) 


சிறு துளை இட்டு

முளைக்கும் செடி 

பாறையும் குழைய


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)