கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

Jul 24, 2026,03:33 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கோபுரத்துக்

கலசம் நீ!


கோவில் வாசல் 

படிக்கட்டு நான்! 


பசியாற்றும் 

அன்னபூரணி நீ! 


பசியாறும்

பாமரன் நான்!




அறிவில் சிகரம் தொட்ட 

கலைவாணி நீ! 


அறிவென்றால் என்னவென்றே 

அறியாத பிறவி நான்!


கொடுப்பதற்கென்றே 

பிறப்பெடுத்தவள் நீ! 


உன்னிடம் வாங்குவதற்கென்றே

அவதாரம் எடுத்தவன் நான்! 


திருத்தேரில்  அமர்ந்த 

உற்சவ மூர்த்தி நீ!


தேரை வடம் பிடித்து இழுக்கும் 

சாதாரண பக்தன் நான்! 


அரங்கன் ரங்கநாதன் 

பக்தை ஆண்டாளை 


ஆட்கொண்டது போல் 

அடியேன் பசுபதியை 


ஆட்கொண்ட 

சூரியகலா நீ! 


வரம் கொடுக்கும் வல்லமை 

உனக்கு உண்டு! 


வரம் பெறும் அருகதையே 

எனக்கு உண்டு! 


நம் இருவரையும் 

இணைத்து வைத்த 


இறைவன் 

பெரியவன் தான்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்