வானம் நீர்நிலை ஆகிறது.. நீரில் ஒளியோன் காணும் கொக்குகள்!
Jul 31, 2026,03:52 PM IST
- சசிகலா விஸ்வநாதன்
கொக்குகளின் கூட்டம்
நீர் படுகை
பனிமூட்டம் திரை
பனி மூட்டம்
தெளி நீர் பரப்பு
கொக்குகள் நிழல் எதிரொளி
கண்ணாடி எதிரொளி
சற்றே மங்கல்
நீர் படுகை ஆடி
அதிகாலை பொழுது
கொக்குகள் குழுமம்
ஒளி நீர் படுகை
காணும் கொக்குகள்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு; மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)