இதுவும் சரிதானே!

Su.tha Arivalagan
Jun 25, 2026,12:43 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


திலகா தன்  ஐந்து வயது மகன் ஜயந்தனுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்.


B U N; N U N ;S U N... இது  போல பல வார்த்தைகளை எழுதப் பழக்கினாள்.


எளிதான ஒரு வாக்கியம்; என்று நினைத்து; எழுதச் சொன்னாள்;' Sun sets in the eve. ஜயந்தன் எழுதினான்' Son sets in the eve. அவனுக்குப் புரியவே இல்லை; ஏன் அம்மாவுக்கு கோபமும்; தாத்தாவுக்கு சிரிப்பும்; ஏன் வந்தது என்று. 




'ஆமாம்! ஜயந்தன்! சரியாகத்தான் எழுதியிருக்கிறாய்! பலே! ' என்றவர்; திலகாவிடம் சொன்னார், ‘வீணே ஏன் மன அழுத்தம் ஏற்றிக் கொள்கிறாய்?  இதுவும் சரிதானே! இப்போது தான் ஆங்கிலம் கற்க ஆரம்பித்துள்ளான். கற்றுக் கொண்டதை தவறில்லாமல் எழுதின குழந்தையைப் பாராட்டாவிடினும், கடியாமல் இருக்க, இப்போது  நீ  கொள்வது அவசியம். தற்போது அவனைக் குழப்பாதே! ஆங்கிலத்தின் எழுத்துரு இலக்கணம் இரண்டு வருடங்களில் படிந்துவிடும்' என்று.


திலகாவும் அதை யோசிக்க ஆரம்பித்து விட்டாள்; என்பது அவள் முகம் மலர்ச்சியிலிருந்து தெரிந்தது. மனம் தெளிந்தவள், தனது ஆங்கில மொழி பயிற்சியை தொடர்ந்தாள்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)