ஒரு துளி விஷம்
- சசிகலா விஸ்வநாதன்
துளி விஷம்
எனக்கு அமுதம்;
ஒன்றாகும், எனில்
எனக்கு அதைத் தருவதில்
உனக்கு ஏன் பிணக்கு?
உன் கள்ள
விழி பார்வையில்
கசியும் மது ; அது!
'மது' எதுவென அறிந்திலேன் நான்; இன்றுவரை !
உன் அதர புன்னகை எனத்
தெளிந்தேன் நான்; இன்று!
பவள வாய் சொல் ஒன்று
சிந்திடும் 'கள்' எனத் தெளிந்தேன்!
விஷத்தில் இத்தனை வகையிருக்க;
மிகையாக வேண்டாம்!
எனக்கு ஒரு துளி விஷமே போதும்!
விளம்பிடு!
அதை எனக்கு இப்போதே!
விந்தை ஒன்றைக் காண்பாய்!
நானும்!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)