Tamil Short Story: அனுசரிப்பு

Su.tha Arivalagan
Jun 03, 2026,02:21 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ரஞ்சிதம், கலாவதி டீச்சரை பார்த்ததும் பயத்தால் வெலவெலத்து நின்றவள். 'இல்லீங்க டீச்சர்! என்று ஏதோ சொல்ல வந்தவளை, 'யாரோடு வம்பு பேசிட்டு இருக்கே? வேகமா இங்க வந்து சோலியை பாரு! இல்லேன்னா; வீட்டுக்குப் போயிடு,' என்று மேஸ்திரி  செல்வராசு காட்டுக் கத்தலாகக் கத்தவும்;  'நான் வரேன் டீச்சர்!' என்று சொல்லி சிட்டாய் பறந்து விட்டாள். 


திங்கள் கிழமை காலை  ரஞ்சிதம்  தயங்கியபடியே அவளிடம் வந்தாள். '  அன்னிக்கு நீங்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நான் வேலைக்கு செல்லும்படி நேர்ந்துவிட்டது. என் வீட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கும் போது  என்னால் என்ன செய்ய முடியும்? வீட்டை அனுசரிப்பதும் முக்கியம்தானே' என்றாள். 


'அது சரி! பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களைத் தான் வேலைக்கு அமர்த்த முடியும்; என்ற அரசாணையை மீறுதல் ஆகாதா?' என்றவளைப் பார்த்து வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்தவள் 'டீச்சர்! கைநாட்டு இட்டு கூலி வாங்குவது அம்மா செங்கமலம். வீட்டுக்கு வரும் வரும்படியும் குறையாமல், என் படிப்பும் கெடாமல், இருக்க மேஸ்திரி செல்வராசு எங்களுக்கு உதவியாகத்தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார். நீங்கள் எங்காவது பிராது கொடுத்து விடாதீங்க. காரியம் கெட்டுவிடும் . பெரிய மனசு  வைக்க, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்' என்றாள். 




குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது, இந்த தலைமுறையால் இயலாது; என்பதைப் புரிந்து கொண்டாள் கலாவதி டீச்சர். ரஞ்சித்தின் நிலைமையை அவளும் அனுசரிக்கத் தானே வேண்டியுள்ளது!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)