Tamil Thulippakkal : சசிகலா விஸ்வநாதனின்.. தித்திக்கும் துளிப்பாக்கள்!

Su.tha Arivalagan
May 22, 2026,11:22 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


நீண்ட கவிதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், உரைநடைக் கவிதைகள் வரிசையில் துளிப்பாக்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. துளிப்பாக்கள் என்பது வேறு ஒன்றுமில்லை, ஹைக்கூ கவிதைகள்தான்.


எழுத்தாளர், கவிஞர் சசிகலா விஸ்வநாதனின் துளிப்பாக்கள்.. உங்களுக்காக இலக்கிய சுவையுடன்...!


(1)

வானம் கிழிந்து

ஒளி வெள்ளம்

பெரும் மழை


(2)

வறியோர் குரல்

முதியோர் கூற்று

செவிடன் காதில் சங்கு




(3)

ஒன்று சுருங்க

ஒன்று விரிய

நிஜமும் நிழலும்


(4)

உயரம் அறியாது 

ஏறியும் இறங்கியும் 

ஏழையின் வாழ்வு


(5)

கோடையின் தகிப்பு 

ஒளியின் சிதறல்

கானல் நீர்


(6)

சூடான தேநீர்

புன்னகையில் மருமகள்

அப்பம் மேல் நெய்