அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

Meenakshi
Feb 14, 2026,02:26 PM IST

சென்னை: நாயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா? என்று  செங்கோட்டையன்  நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே திமுகவை தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், நேற்று சேலத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், திமுக தனக்குப் போட்டியாக கருதுவதும், தன்னை வெல்லப்போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் நம்மைத்தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாகிறது. பணத்தை கொள்ளையடிப்பதை தவிர அவர்களுக்கு வேறெதும் அனுபவம் உள்ளதா?  என்னை போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க தில், திராணி இருக்கிறதா? . ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாததை வாக்குறுதிகளாகக் கொடுக்க மாட்டேன். ஆட்சிக்கு வந்தபின்னும் அவர்கள் கொடுக்கவில்லை என்று சொல்லாமல் உங்களுக்காக போராடத் தயாராக இருக்கிறேன்.




தமிழகம் எப்போதும் அவுட் ஆப் கன்ரோல் என்று கூறும் அரசுக்கு சட்டம் ஒழுங்கில், பெண்கள் பாதுகாப்பில், இளைஞர்கள் வேலைவாய்ப்பில், மொத்தத்தில் உங்கள் ஆட்சியே அவுட் ஆப் கன்ரோல் தான். கட்சி ஆரம்பித்தவர்களையே மறந்தவர்கள், அனுபவம் குறித்து பேசுகிறார்கள். கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் கிடைாது என்பது உண்மை தான். ஆட்சி முடியும் தருணத்தில் வந்து உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். மக்கள் கனவு உங்களை அகற்றி தவெகவை ஆட்சியில் வைப்பது தான்.


நான் போட்ட ஆட்சியில் அதிகாரம் என்ற குண்டு இப்போது கூட்டணிக்குள் வெடித்து வருகிறது. தாறுமாறாக வெடிக்கிறது அந்த அரசியல் குண்டு. ஸ்டாலின் சார் பதறுகிறார். ஒத்துவராது என கூறுகிறார். அவர்களை பொறுத்தவரை ஜெயிப்பதற்கு மட்டும் தான் கூட்டணி என்று திமுகவை  கட்சியை தான் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது "பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது. அனுபவமே இல்லாதவர். முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச்சொல்லுங்கள். திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த கருத்து தற்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.


நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சிற்கு பல்வேறு கட்சி ஆரசியல் தலைவர்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக நிர்வாகி செங்கோட்டையன் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நாயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா என கூறியுள்ளார்.