ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)
- ஷீலா ராஜன்
குழந்தைகள் போன்ற ஒரு அழகை எங்கேயுமே பார்க்க முடியாது. கடவுள் மனிதர்களை படைக்கும்போது குழந்தை வடிவில்தானே படைக்கிறார்.. ஆதியும் குழந்தைதான்.. அந்திமமும் கூட குழந்தமையுடன்தான் முடிகிறது. ஆகவே, குழந்தைத்துவம் என்பதுதான் மனித வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது.
குழந்தைகளை மகிழ்விக்கவும், அவர்களை கற்பிக்க வைப்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது.. அந்த வகையில் குழந்தைகளை குஷியாக்கும் ஒரு பாடலை இப்போது இங்கே தருகிறோம்.. படிச்சு நீங்களும் ஹேப்பியாகுங்க..
அழகான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
அன்பான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
வாலை வாலை ஆட்டிக்கிட்டு இங்கே வா வா
குதித்து குதித்து இங்கே வா வா
அழகான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
அருகம்புல்லை நான் தருவேன் இங்கே வா வா
அரச இலை நான் தருவேன் இங்கே வா வா
காய்கறிகள் நான் தருவேன் இங்கே வா வா
பழம் கூட நான் தருவேன் இங்கே வா வா
துள்ளி துள்ளி வா வா
குதித்து குதித்து வா வா
அசைந்து அசைந்து வா வா
அன்போடு ஓடி வா
ஆசையோடு ஓடி வா
பாசத்தோடு ஓடி வா
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி வா வா வா வா