கடல் ஒரு கவிதை!

Su.tha Arivalagan
Sep 30, 2026,04:47 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


கடலம்மா கடலம்மா என்று என் காதில் விழுந்தது.

அதன் அலை ஓசை வா வா என்று அழைத்தது. 


அம்மா என்று நீந்தி தாயின் மடியில் துயில் கொண்டேன். 

எனை மடியில் வைத்து தாலாட்டியது. 


அருகில் நின்ற படகு என்னை பார்த்து பொறாமை கொண்டது. 

சித்திரசெவ்வானம் நகைத்தது. 


மாலை மயங்கும் சூரியன் ஆச்சரியமாக எனை பார்த்து கொண்டே மறைந்தது. 

கடல் மாதாவோடு சேர்த்து இறைவனிடம் என் இரு பிராத்தனையை வேண்டி கொண்டேன்.




மூழ்கிய போது கடல் சங்கை எனக்கு பரிசளித்தது. 

மீன்கள் நண்டுகள் கடற்பாசிகள் அனைத்து ஜீவராசிகளும் 

நல்லா இருக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு கரையேறினேன். 


பிரியா விடைபெற்று மீண்டும் வருவேன் தங்கமே என்று சொல்லி 

தங்க நிற மண்ணில் என் பாதங்கள் தெரிய நடந்து வந்தேன். 


செல்லமாக அலைகள் காலடி தடங்களை முத்தமிட்டு சென்றன. 

அன்பை நினைத்தால் கண்கள் சொரிந்து விடும். 


இயற்கை எப்போதும் நம் மேல் அன்பாக தான் இருக்கும். 

அதை நாம் உணரவேண்டும். 


மரங்கள் அசையும் போது காற்று வீசுவதும் பாசம். 

கடல் அலைகள் பாசம் மனிதர்கள் தான் வேஷம். 

இயற்கை எப்போதும் உண்மை. 

உண்மை எப்போதும் நேசிக்கிறேன்.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)