இந்திரஜித்!

Su.tha Arivalagan
Jun 08, 2026,12:27 PM IST

- பாரதிராஜன்


இலங்கையின் மன்னன்  இராவணேஸ்வரன் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித்!

இவன்பிறந்ததும் இடி இடித்து மின்னல் தோன்றியது!

இராவணண் ஜோதிடவல்லுநன்!

தன் மகனுக்கு எல்லா கிரகங்களும் நன்மை செய்ய வேண்டினான்!

சனி மட்டுமே மேகநாதனுக்கு உதவவரவில்லை!

எல்லா சாஸ்திரமும் 

தெளிவறக்கற்றான்!




பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளை வென்றதாக சரித்திரம்!

இராம இராவண வதத்தில் இலக்குவனை பிரம்மாஸ்திரம் கொண்டு வீழ்த்தினான்!

அனுமன் சஞ்சீவி மலை மூலமாக பிழைக்க வைத்ததை எண்ணி கோபப்பட்டான் இந்திரஜித்!

மேகநாதன் ஒரே அம்பினால்

லட்சகணக்கான வானர வீரர்களை அழித்தான்!


இனிமேல் இராமலட்சமணைர்களை வதம் செய்ய இயலாது என்பதால் 

தந்தையிடம் தனயன்  சீதாவை விட்டு விடு சண்டை வேண்டாம் என்றான்  தந்தை கேட்காததால் போருக்குச்சென்றான்!

மேகநாதனை வெல்ல பகல்நேரமே நன்று முதலில் 

அவனின் தேரை உடைத்து பின்பே அவனை அழிக்க முடியும் என வீபிஷணன் சொல்கேட்டு மேகநாதன் அழிக்கப்பட்டான்!


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)