Tamil Short Story: மக்களின் மனம்!

Jun 06, 2026,02:02 PM IST

- பாரதிராஜன்


1970, 80களில் மாம்பலம், தி.நகர், மயிலை,சைதை, புறநகர் பகுதிகளான பெரம்பூர், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுடைய தீராத மனக்குறையைப் போக்க கோயிலைத்

தேடி அலைய  ஆரம்பித்தனர். அதாவது குறைகள் நீங்க  மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு போக 

ஆரம்பித்தனர். 


வேலைத்தேடி, மேல்படிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நல்லவிதமாக தீர்ப்பு இப்படி பலகுறைகள். 


ஏழு வாரங்கள் வாரத்தில் எந்த கிழமையில் முதலில் மாங்காடு காமாட்சி அம்மனை தரிசிக்க போகிறார்களோ ,அதே கிழமையில் ஏழுவாரம், ஒவ்வொரு வாரமும் இரண்டிரண்டு எலுமிச்சைபழம், குருக்களிடம் தர ,அதை அவர் அம்மன் பாதத்தில் வைத்து, ஒருபழம் திரும்ப பக்தர்களிடம் வழங்குவார். பக்தர்களுடைய குறை தீர்ந்ததும், அம்மனுக்கு  அபிஷேகத்திற்கு பால் கொடுப்பார்கள். 


மாங்காட்டில் காமாட்சி அம்மன், சிவன்கோயில் ஊருக்குள் இருக்கிறது, பெருமாள் கோயில்  மொத்தம் 3 கோயில்கள். பக்தர்கள் அம்மனை மட்டும் தரிசித்து விட்டு, பஸ்சுக்காக  காத்திரும்போது, பெருமாள் கோயில் செல்வார்கள். 




3 கோயிலும் இந்து அறநிலையத்துறை வசமுள்ளது. பரம்பரை தர்மகர்த்தாவாக  மணலி ராமகிருஷ்ண முதலியார் என்பவர் இருந்தார். நானும் இந்த அம்மன் கோயிலுக்கு, புதன் கிழமை செல்ல ஆரம்பித்தேன். நல்ல வேலை

கிடைக்க வேண்டி செல்ல ஆரம்பித்தேன். இந்த கோயிலில்  வெள்ளி, சனி, ஞாயிறு கூட்டம் அதிகமாக வர ஆரம்பிக்க, சிறப்பு தரிசனம் கட்டணம் ரூ.5/என்று வசூலிக்க ஆரம்பித்தனர். 


ஒரு புதன் கிழமை மணலியாரும் கோயிலுக்கு வர ,நானும் அந்த சமயத்தில் அங்கே இருந்தேன், எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர், தரிசனம் முடிந்த பிறகு  வெள்ளி  சனி  ஞாயிறுகளில் கூட்டத்தை சமாளிக்க சில ஆலோசனைகளை நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டார். 


அடுத்த வாரம் நான் அம்மனைத் தரிசிக்க  வந்த போது கோயில் பணியாளர், சார்  நீங்க சிறப்பு தரிசனத்தில் போங்க என்றார், நான் கூட்டம் இல்லை என்றதற்கு, தர்மகர்த்தா உங்களைப்பற்றி சொல்லி இருக்கிறார் என்று சிறப்புதரிசனம் மூலமாக அம்மன் தரிசனம். 


நான் அப்போது மேற்கு மாம்பல வாசி,  அதனால் 49பேருந்தில் மாங்காடு சென்று  3கோயிலுக்கும் போய் விட்டு வருவேன், பிறகு மிதிவண்டி மூலமாக போக ஆரம்பித்தேன். இது பழைய கதை. தற்போது மக்கள் பிராட்வே அருகிலுள்ள கோவிந்தப்பநாயக்கன் தெருவிற்கு பக்கத்தில் உள்ள காசி செட்டி லேனில் உள்ள நிமிஷாம்பாள் கோயிலுக்கு மாதாமாதம் வரும் தசமிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.


அதாவது 10தசமிக்கு [வளர்பிறை&தேய்பிறை] கோயிலுக்கு வந்து அம்பாளை வேணடிக்கொள்கிறார்கள். சிறிய கோயில் நவகிரகம் தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பூஜைக்கு அர்ச்சனை செய்ய நாம் கொடுக்கும் தேங்காய், பழங்கள்,அர்ச்சனைக்கு பின் யார் யார் கொடுத்தார்களோ அவர்களிடம் திரும்ப வழங்கப்படுகிறது. தசமி அன்றுமட்டும் கோயில் முழுநேரம் திறந்திருக்கிறது. அங்குள்ள நெய் தீபத்தில் பக்தர்கள் நெய் வாங்கி கொடுக்கலாம். பக்தர்களின் குறைகள் நிவர்த்தியாகிறது. கோயில் கும்பாபிஷேகம் 09/05/2025 சிறப்பாக நடந்து முடிந்தது. 


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்