- உமாராணி சங்கரலிங்கம்
அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
ஜூலை 8,2022.
வெள்ளிக்கிழமை.

காலை 5 மணிக்கு எழுந்து கிளம்பி எல்லாவற்றையும் pack பண்ணி விட்டு பஸ்ஸில் ஏற்றி வைத்து 7.15 க்குக் கிளம்பி விட்டோம்.எங்களோடு வந்த பாஸ்கர் அண்ணாவிற்கு சிறிது உடல்நலக் குறைவு திடீரென ஏற்பட்டது. மிகவும் வருத்தமாக இருந்தது.
நாங்கள் எல்லோரும் 7.30 மணி அளவில் ஆதி சங்கரரின் மடத்திற்குச் சென்றோம். சுமார் 510 படிகள் இருந்தன. மேலே உள்ள சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம். நாங்கள் ஈசனுக்கு அபிஷேகம் செய்து விட்டு பின் ஆதி சங்கரர் தியானம் செய்த குகைக்குச் சென்று சிறிது நேரம் தியானம் செய்தோம் .8 மணிக்குத் திருப்பினோம்.

வரும் வழியில் banihal என்ற இடத்தில் பாஸ்கர் அண்ணாவிற்கு உடல் நலக் குறைவு காரணமாக அங்குள்ள military hospitalக்குச் சென்றனர். அமர்நாத் யாத்திரீகர்கள் என்பதால் சிறந்த கவனிப்பு. ஜவான்கள் வந்து எங்கள் பஸ்ஸை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அதற்குள் அருண்சர்மா என்ற போலீஸ் அதிகாரியும் வந்து எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்தார்.
Treatment முடிந்து அண்ணாவை போலீஸ் ஜீப்பிலேயே கூட்டி வந்து விட்டனர். அவர்களுக்கு எங்கள் நன்றிகளைக் கூறினோம். அருண் சர்மா வே நேரே வந்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நம் ஊர் இராமேஸ்வரத்தை வந்து காண ஆவலாக உள்ளதாகக் கூறினார். அவருடைய போன் நம்பர் வாங்கினோம். எங்களுடைய நம்பரையும் வாங்கிக் கொண்டு தான் தமிழ் நாடு வரும் போது தொடர்பு கொள்வதாகக் கூறினார்.

அருமையான பையன். இப்போதும் எப்பொழுதாவது message அனுப்புவார்.Tunnel வழியாக வந்து, நாங்கள் banihalஇல் போகும் போது சாப்பிட்டுத் தங்கியிருந்த லங்காவில் சுமார் 3 மணி அளவில் வந்தோம் . போகும் இருந்த மனநிலை இப்போது உள்ள மனநிலை. திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் பஸ் ஏறி கட்ராவிற்கு இரவு 8. மணி அளவில் வந்து hotel pratap resort இல் தங்கி இரவு 9.30. அந்த hotelலிலேயே dinner சாப்பிட்டோம்.
கட்ரா வில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்று இரவே செல்லத் தீர்மானித்தோம். சரியான மழை. இடி, மின்னலுடன் கூடியப் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. அதைப் பற்றி அடுத்ததில் கூறுகின்றேன்.
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}