Short Story: கிணறு ஒரு சுகம்!

Su.tha Arivalagan
Jul 17, 2026,11:57 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


தீபாவளி இந்த வருடம் மாமா வீட்டில். சென்னையில் ஓரே பக்கட்  தண்ணிரில் குளியல். தண்ணீர் திண்டாட்டம்.  


வென்னீரில் தான் குளிக்கவேண்டும் என்பது  அம்மாவின் எழுதப்படாத சட்டம். ஜுரம் வந்துவிடும் என்பாள். மாமி "வாடா !ரமணா!  குளிக்கலாம்" என்று கூட்டிப் போய் தோய்க்கும் கல்லில் உட்கார்த்தி தண்ணீரை கிணற்றிலிருந்து சேந்தி விட்டாள்.




ஆகா! ஆனந்தம்! ஆச்சரியம்! கிணற்று நீர் சூடாக அல்லவோ இருந்தது! எப்படி? மாமாவிடம் கேட்க; "ஆமாண்டா! வெயிலாகி குளித்தால் கிணற்று நீர் " சில்" எனவும் காலை நேரத்தில் குளிக்க கிணற்று நீர்" கண கண " வென சூடா இருக்கும் என்றார்.


நல்ல சுகமான ஒரு அனுபவம். அலுக்காமல் சலிக்காமல் தினம் மூன்று முறை குளித்தேன். ஜுரம் வரவில்லை .இனி ஒவ்வொரு லீவுக்கும் மாமா வீடு... கிணற்று குளியலுக்காக.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)