தித்திப்பான பால்கோவா .. செஞ்சு சாப்பிட ஜஸ்ட் 15 மினிட்ஸ் போதும்!
- சியாமாளா வெங்கட்ராமன்
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த உறவினர்களை பார்க்க செல்ல வேண்டிய அவசியம், அவர்களுக்கு பால்கோவா மிகப் பிடிக்கும். அதை செய்து கொண்டு போக நினைத்தேன் பால்கோவா என்று சொல்லிவிட்டீர்களே அது செய்வது என்ன சுலபமா என்று சிலர் முணுமுணுப்பது கேட்கிறது.
இதை செய்ய 15 நிமிடங்களே போதும். ஆம் அதை செய்வது மிக சுலபம். ருசியோ அபாரம். அதற்குத் தேவையான பொருட்களையும் செய்முறையும் கூறுகிறேன். நான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த கொஞ்சம் பால்கோவாவை உங்கள் கண்களுக்கு விருந்தாக வைத்திருக்கிறேன் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
அமுல் மில்க் பவுடர் நாலு கப்
பொடி செய்து சர்க்கரை ஒரு கப்
நெய் முக்கால் கப்
தண்ணீர் அரை கப்
ஏலப்பொடி அரை டீஸ்பூன்
செய்முறை
மேலே உள்ள பொருட்களை ஒரு பௌலில் கொட்டி நன்றாக கிளறவும். ஒரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை கொட்டவும். அதை மூடி போட்டு மூடி ஒரு பாத்திரதை குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
ஆறியதும் பால்கோவா ரெடி. அதை ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டு சென்று கொடுத்தேன். நான் திரும்புவதற்குள் அத்தனை பால்கோவாவும் தீர்ந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் ருசியை.
என்னங்க இந்தத் தீபாவளிக்கு நீங்களும் என்னோட ஸ்டைல் பால்கோவா செய்து சாப்பிட்டுப் பாருங்க.. தித்திப்பா இனிக்கும் இந்தத் தீபாவளி.
(ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரான சியாமளா வெங்கட்ராமன், நெய்வேலி என்.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதிவரும் இவர், எழுதிய 'யாதுமாகி நின்றாள்' சிறுகதைக்காக 'தமிழ்த்தாய்' விருதைப் பெற்றுள்ளார். மேலும், சென்னை ராமபுரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பைத் தொடங்கி அதன் தலைவியாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சமூகத் தொண்டு செய்து வருகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்)