Shyamala Venkatraman Tips: மொறு மொறு ஓமப்பொடி!

Su.tha Arivalagan
Nov 18, 2026,10:17 AM IST

- சியாமளா வெங்கட்ராமன் 


தீபாவளி இப்போதுதான் முடிந்தது. இந்தியாவைப் போலவே இன்று பல்வேறு உலக நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எங்கள் வீட்டில் அதாவது இங்கிலாந்திலும் தீபாவளி களை கட்டியிருந்தது.


இந்தியாவில், இங்கிலாந்தில் உள்ளவர்கள் பண்டிகைகளை சரியாக கொண்டாட மாட்டார்கள் என்று சொல்வது சகஜம். ஆனால் சென்னையை விட இங்கு உள்ளவர்கள் மிக நன்றாக பாரம்பரியமாக கொண்டாடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


எங்கள் மருமகள் டாக்டர் சுபாஷினி ஓமப்பொடி ரிப்பன் பக்கோடா என கார வகைகள் செய்தார்கள். ஆமா, உங்களுக்கு ஓமப்பொடி செய்யத் தெரியுமா.. தெரியாட்டி பரவாயில்லை.. ஓமப்பொடி செய்யும் முறையை சொல்றேன் கேட்டுக்கங்க.


தேவையான பொருட்கள் 




கடலை மாவு  இரண்டு கப் 

அரிசி மாவு அரை கப் 

ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன் (ஊற விட்டு அரைக்க வேண்டும் )

பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் 

உப்பு தேவையான அளவு  


செய்முறை 


ஓமத்தை ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவு, அரிசி மாவு ஒன்றாக கலந்து ஓமம்  தண்ணீரை விட்டு, ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய  வேண்டும்.


ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். பொன்னிறமாக வந்ததும் மெதுவாக கரண்டியால் எடுக்க வேண்டும்.


அவ்வளவுதான் மொறுமொறு ஓமப்பொடி தயார். நீங்களும் செய்து பாருங்கள் மிக சுலபம்தான்.


(ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரான சியாமளா வெங்கட்ராமன், நெய்வேலி என்.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதிவரும் இவர், எழுதிய 'யாதுமாகி நின்றாள்' சிறுகதைக்காக 'தமிழ்த்தாய்' விருதைப் பெற்றுள்ளார். மேலும், சென்னை ராமபுரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பைத் தொடங்கி அதன் தலைவியாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சமூகத் தொண்டு செய்து வருகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்)