காவியத் தலைவன் கண்ணதாசன்!
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
காவிய தலைவன்.....
கவிதைக்கு அரசன்.....
கண்ணதாசன்....!
கல்வி கற்று அறிந்ததல்ல கவிதை எனும் ஞானம்.....!
கலைமகளின் கருவினில்
உருபெற்ற ஞானி......!
இவர்
கவிஞனாக
தமிழ் முத்துக்களால்.......
தத்துவங்கள்.....
நவின்ற........தேனீ.....!
அர்த்தமுள்ள இந்து மதம்....
ஏசு காவியம்.....
மனவாசமும்.....
வனவாசமும்......
வாழ்க்கையின் தரம்....!
பாமரமக்களின் பகுத்தறிவிற்கு......
பசி தீர்க்கும்
ஞானமென்னும்
சோலைவனம்.....!
காலங்கள் கடந்த
பின்னும்.......
இவரது
கவிதைகள்.....
காற்றோடு
மனதை வெல்லும்......!
மனம் பேசும்
மொழிகளை....
கவிமாலைகளாய் தொடுத்து......!
காதல் மணம்
கமழ......
சொற்களுக்கும்
உயிர் கொடுத்த பிரம்மன்.....!
தத்துவ வரிகளால்.....
தமிழ் மொழிக்கு
பெருமை சேர்த்து.....!
சிந்தனைகள் சிறகடிக்க....
சோகத்தின் தாகம் தீர்த்து......!
சுகமான வரிகளினால் சுமையை
கூட சுகமாக்கி.....!
கனவுகளை
காதலாக்கி.......
கண்ணீரையும் கவிதையாக.....
வடிவமைத்த கலைஞன்.......!
எண்ணங்களை
கருவாக்கி.....
வாழ்க்கையை
பாடாலாக்கி.....
செந்தமிழை கோர்வையாக்கி....
செவிக்கும் சுவை சேர்த்த
ரசிகன்......!
கண்ணீர் துளியிலும்.....
காதல் மொழியிலும்....
உலகை வென்று......!
தமிழினத்தின்
இதயத்தில்......
என்றும் ஒளியாய்
நின்று......!
வானுக்கும் அழகான
நிலவு ஒன்று.....!
கவிதைக்கு......
கண்ணதாசன்
என்று......!
மனதில் வாழும் தெய்வமாக....!
காலங்கள் கடந்தாலும்....
தமிழுக்கு இனிமை சேர்த்த.....
அழியாத பெருமையே கண்ணதாசன்.........!
உமது பிறந்தநாள்......
எங்கள் மனம் மகிழும்
திருநாளே......!
வளர்க தமிழின் சுவை.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)