செந்தாமரை மலர்தாயே

Su.tha Arivalagan
Nov 23, 2026,01:28 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி


மங்கல நாயகியே

மகிமை பெற்றவளே

நிரந்தர வாசகியே

தடாகத் தாமரையே

தூய்மை திருக்கோலம்

பக்தியவளே பேறுகள்

பதினாறும் அருளிடும்

நல்வினையா(லே)ளே

வறுமை நீக்குபவளே

வற்றாத செல்வம(க)வளே

செங்கமலத் தண்டு


நெய் ஒளியவளே

முற்பிறவிப் பாவம்

கழிப்பவளே

நிரந்தரமற்றவளே

நிலையானத் தூய்மை

பக்தியில் நிலைப்பவளே

பங்கம் மலரும் கமலமே

ஆயினும் அழுக்கொட்டா

தூயவளே உலக பற்றுக்கு

மத்தியில் வாழ்ந்திடும்




மாந்தர் மனதில்

மாசற்ற தன்மையை

உணர்த்துபவளே

உள்முகத் தேடல் 

உயர்வுக்கு 

ஆதாரமானவளே

பரமனின் இல்லாளே

செம்முலரி பூவழகே

பணிந்தேற்றுகிறேன்


உன்பாதம் வாழ்வில்

செழுமை சேர்த்திடம்மா

வறுயவர் எளியவர்

உள்ளத்திலும் இல்லத்திலும் 

குடியமர்ந்திடம்மா

செந்தாமரை மலர்தாயே

மங்கலம் அருள்வாயம்மா!