விழித்தெழு சமூகமே! விடியலை நோக்கி!
- சிவசத்தியா, காரைக்குடி
விழித்தெழு சமூகமே!
விடியலை நோக்கி....
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" .
சமூகம் நாமே....
விடியலை நோக்கிய
மாற்றம் நமக்குள்ளே
விழித்தெழ வேண்டுமே
நெடுநீர் மறவி
மடிதுயில் நான்கும்
கெடு நீரார்
காமக் கலன்
நீக்கி சோர்வடையாது விடாமுயற்சி சூழலுக்கேற்ற
எண்ணத் துணிவே
எச்செயலே ஆயினும்
சிறுதுளி பிரளயமாய்
ஈந்திட கர்மம்
செய்து அறமின்மை
நீக்கிட அறமே
நேர்மை நன்நெறி
வாழ்வே உயர்வே
நீதி கருணை
பண்பே சிறப்பு
விடியலாய் விடிந்திட
மலர்ந்திடும் அமைதியே
கூம்புதல் பருவத்துப்
பாலியல் வன்புணர்வு
உயிர்பலி கையூட்டு
களவு மதப்பாகுபாடு
ஏற்றத்தாழ்வு தீண்டாமை
மதுபோதை குடும்பச்சிதைவே
சாலை விபத்து
கல்வித்தடை குழந்தைப்
பணியாளர் வறுமையென
சமூக அவலங்களே
எண்ணிலடங்கா கரிசுகள்
மக்கள் பணத்தை
சூறையாடி தலைமுறைகள்
காக்கும் தன்னலவாதிகளே
முற்காலத் தே(தீ)ர்வே
மை சுட்டுவிரல்
அறியாமையே தற்காலம்
சந்திக்கும் அவலங்களே
பொறுப்பு நமதன்றோ?
இனியும் உறங்குவதோ?
துன்பத்தில் வாடுவதோ?
மெய்வாழ்வது எப்போது?
விழித்தெழும் உன்னதமே
மண்ணுயிர் உயிர்த்தெழ!