ஞானத்தின் தெளிவு!

Su.tha Arivalagan
Oct 15, 2026,12:33 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி


குருதியோட்டத்தின்

குறுகிய

மாற்றம்


அரூபத்தை

அவனாக 

சிவனாக

உணர்பவன்


அனுபவ

அவமானங்களின்

உச்சம்


எண்ணக்

குறிக்கீடற்றவன்

உள் (அக) உலகில்

பெரியவன்




வெளியுலகின்

சுழியம்

உணர்ந்தவன்


சுற்றிக்கொண்டே

கற்றுக்கொண்டிருப்பவன்


உங்களில்

ஒருவன்

உங்களுக்காக

மதியை விட


விதியை உணர்ந்த

மதியாளன்


யாதொரு உடலுக்கும்

உயிர்க்கும்

துன்பம் தரா

தூயவன்


பற்றற்ற

பைந்தமிழன்

இறையின்

மறு பக்கம் 


வெளியே

பித்தன்

உள்ளே 

சித்தன்


ஆசை துறந்த

அறம் தவறா 

அழுக்கற்றவன்


தன்னை

மறந்து

விண்ணில்

வாழும்

மா மனிதன்


கவலையை

கடந்த ஞானி

இரவு பகல் 

பாறா 

பட்டிமன்றப்

பேச்சாளர்


உலகமனைத்தும் அவன்

வசம்


கிளை பரப்பும்

ஆலமரமாய்

அவன்


உறவுகள்

அவனே சிவனாய்

சிவனே

அவனாய்

சிலாகிப்பவன்


உடல் பிணி

உள்ளத்தில் களங்கமற்ற

தெளிவாளன்


மாந்தன் நோக்கி உணர வேண்டிய

நன்நூல்


நடமாடும்

மாந்தனின்

நூலகம்


தளத்தின் போக்கு செய்யுமெனக்கு

பிள்ளைகள் தந்தபட்டம்


மதி மதுவுற்ற

நிலை

வினைப்பதிவை தேகமாய்

கொண்ட ஞான வித்தகனாய் 

பித்தன்


(ஞான வித்தகன்.... பரம் பொருளின் செயல் விளைவு திருவிளையாடல்களை(கண்டறிந்தவன்) பட்டறிந்தவன்)