நிலையற்ற உலகம்.. நிலைநிறுத்த முயல்கிறோம்.. ஆனால் நாம் மட்டும் எப்படி?

Oct 15, 2026,11:18 AM IST

- அ.தாமஸ்


இவ்வுலகம் நிலையற்றது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்; இருந்தும், நிலையற்ற ஒன்றில் நம்மை நிலைநிறுத்தவே முயல்கிறோம். இவ்வுலகே நிலையற்று நிர்மூலமாகலாம்; இந்நிலையில் நாம் மட்டும் எப்படி நிலைபெற்றிருக்க முடியும்?


எது பற்றற்ற நிலை என்பதை அறிந்துகொள்ளவும்  நாம் பற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எது பற்று என்றே அறியாமல் நாம் பற்றற்று இருப்பது சாத்தியமில்லை தானே?




இவ்வுலகில் எதுவும் நிலையில்லை! நாமும், நாம் சந்திக்கும்  உணர்வும் உறவும் கூட. இன்றைய சில சோகங்கள் நாளை மகிழ்வாவதும், இன்றைய சில நண்பர்கள் நாளை எதிரியாவதும் வாழ்வியல் யதார்த்தம்தான். 


நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும் நம் வாழ்நாளின் கடைசி நாள் என்ற நிலையில் வாழப் பழகிவிட்டோமேயானால். இவ்வுலகில் பற்றும் பாசமும் பணமும் பதவியும் பயனற்றவையாகி நம்மைப் பயனுள்ள நிலைக்கு உந்திவிடும்; எதற்கும் கலங்காத மனம் உயர் மகிழ்வைத் தந்துவிடும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்