புதிய பாதை.. ஒரு நிமிடக் கதை (34)

Oct 13, 2026,12:26 PM IST

- பூரணவள்ளி சேகர்


தமிழகத்தில் ஓடும் அரசு நகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்களுக்கு இலவசம் என்று முதல்வர் ஆரம்பித்து வைத்ததில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானம் கணிசமாகக் குறைந்தது என ஆட்டோ ஓட்டுநர் எல்லாரும் கலக்கத்துடன் இருந்தனர்.


அடுத்த மாதச் செலவுகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தனர். எல்லாரையும் போல ராஜனும் இரண்டு நாள் கலங்கிக் தான் போயிருந்தான். இரண்டு நாள்கள் யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தான் ராஜன்.


தன் ஆட்டோ மற்றும் வேனை  வருடாந்திர வாகனத் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டி இருந்ததால் வாகனங்களை பழுது பார்க்க அனுப்பினான் ராஜன். எல்லாம் முடிந்து வந்த போது ஆட்டோவில்  நேரமாகிவிட்டது என்று இரண்டு கல்லூரி மாணவிகள் ஏறினர்.




ஆட்டோவில் ஏறியவுடன் ஆச்சரியத்துடன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர். மறு நாளிலிருந்து மாணவிகள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திலிருந்து கல்லூரிக்கு  இந்த ஆட்டோவில்தான் செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்தனர்.


ராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சி.  கல்லூரி முடியும் நேரத்திலும் இதே ஆட்டோ தான் வர வேண்டும் என்று ராஜனிடம்  சொல்லிச் சென்றனர்.


ஆட்டோவில் ஏறியவுடன் ஆட்டோவில் பொருத்தப் பட்டிருந்த பலகைக் கணிப்பொறியில் அவர்கள் விரும்பிய பாடல்களும் துணுக்குகளும் ஒளிபரப்பானது.


கல்லூரி செல்ல ஆகும் அரை மணி நேரமும் தன் கைபேசியின் இணையத்தை சேமித்தனர். இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளை விடுத்து ஆட்டோ மற்றும் வேனில் பயணிக்க விரும்பினர். 


ஆட்டோவில் இருந்த பலகைக் கணிப்பொறியில்  வீடியோக்கள் பார்த்தபடியே இனிமையாகப் பயணம் செய்தனர்.


அவர்களின் சந்தோஷத்தைப் பார்த்து புன்னகைத்தபடி, நம்பிக்கையுடன் ஆக்சலரேட்டரை முடுக்கினான் ராஜன்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்

news

திருந்திய குரங்கு

news

புதிய பாதை.. ஒரு நிமிடக் கதை (34)

news

அறுபடை வீடுகளுக்கு நிகரான.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

news

பொய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்