குயவன்!

Su.tha Arivalagan
Oct 23, 2026,03:01 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி


இறைவன் என்றோர் குயவன்

அவன் சுழற்றும்

கால நேமியில்

மலர்ந்தவன்

மாந்தன்


குலத்தொழில் குயவனின்

சுழற்றும் நேமியில் தோன்றுவன

மண்கலன்கள்


இறைவனின்

நேமியில்

அறிஞன்

மூடன்

வளமை வறுமையென

அனைத்துமுண்டு




குயவனின் எண்ணங்கள்

வடிவங்களாய்


கலன்கள்

உருவாக்குகிறான்


துன்பம் போக்கி

இன்பம் காண 

அறிவையமைத்தான் 


மாந்தனுக்கு

குயவனும் வலிப்பு நோய்க்கும் அரையாண்டு

குழந்தைக்கும்

பண்டுவமாய்

பயன் பட்டான்


தொன்மை

காலம் தொட்டே

மாந்தனின் உடலும்

குயவனின் மண் ஏனங்களும்


காலச்சுழற்சியால்

எங்கே தொடங்கியதோ

அங்கே பிறந்து வளர்ந்து வாழ்ந்து

தேய்ந்து

அழிந்தும் 


மீண்டும் செயல் விளைவுக் கேற்றபடி

தோன்று கின்றனவே


உலகனைத்து

தொடர் காலசுழற்சி இயக்கத்திற்கும்

பேரிறை ஒருவனே


உருவிலி அறிவால் மட்டுமே 

உணரப்படுபவன்


நம்மை மண் கலன்களாக 

தோற்றுவித்து

வாழ்க்கை நேமியில் 

சுழலவிடுபவன்


நமக்கெல்லாம் 

தலைவன்

அவனே இறைவனென்னும் குயவன்.