- சிவசத்தியா, காரைக்குடி
ஆதன்யத்தை அறியாத அறிவியல் முடம்
அறிவியலை அறியாத ஆதன்யம் குருடு
பெரியவர்கள் விட்டு சென்ற பழக்க வழக்கங்களை
மூடநம்பிக்கைகள் என்று பகடி
கிண்டல் செய்கிறோம்
அறிவியல் சார்ந்த உண்மைகள் என்பதை அறியாது
வழிமரபு வழிமரபாக தொடரும்
நம்பிக்கைகளுக்கு அறிவியல்
கரணியங்கள் நிறையவுண்டு

ஓலைச்சுவடிகளாக
ஓவியங்களாக
சித்திர சிலைகள் வழிபாடுகளாக
நமக்கு அருளிய
பொருட்களஞ்சியங்கள் கருவூலங்கள்
வளரும் இளம் பருவத்திலேயே
உருவங்கள் வழியாக
ஒழுக்க பண்பாட்டை தெய்வ பக்தியின் அடிப்படையில்
ஆசு நீக்க அமைத்தனர்
பருவமடையா அகவையில்
நன்மணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த
முன்னோர்கள்
வளர்ந்ததும்
கோயிலுக்கு அனுப்பி
ஓவியங்கள் சிலைகளை கண்டு வர செய்வர்
அங்கே படிமைகள் கட்டித்தழுவும்
காட்சிகள் கண்டு இன்புற்று
இல்லறத்தில்
இணைவர்
குழந்தை பிறப்பு தொடங்கி
மாந்தனின் நிறைவு வாழ்வு வரை
படிமங்களின் வழியே வாழ்தலை கற்றனர்
கல்வியறிவில் சிறக்க கலைகமளையும்
வளமுடன் வாழ
திருமகளையும்
வணங்கி
வாழ்ந்தனர்
நவரசங்களை ஆடல்கலை சிற்பங்களில் வடிவமைத்து
வீர விளையாட்டுக்களையும் அதிலிணைத்து
உடல்நலம் மனவளம் கண்டனர்
இறைவன் (நித்யசுத்தன்) பொழுதும் தூய்மையானவன்
அவனை கண்டு
வணங்க உடல் மனத் தூய்மையை
கடமையாக இருத்தலை
கொண்ட பெரியவர்கள்
நீராடலை தினம்
வலியுறித்தி
கோயிலுடன் தொடர்புபடுத்தி
ஒழுக்கப் பழக்கத்தை பண்பாடாயமைத்தனர்
மாந்தர்களுக்குள் இறைவன் வாழ வேண்டுமெனில்
உள்ளங்கள்
அன்பும் அருளும் நிறைந்த கோபுரமாய் உயரவேண்டும்
கலைக்கூடம்
கோடி நன்மைகள்
உண்டாக்கும்
பிறப்பிடம்.
சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!
The Art of Adjusting
விதைத்ததுதானே..!
A taste for pure honey needs courage
வாழ்க்கை கலைக்கூடம்!
The Mask We Wear
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
கனாக் கண்டேனடி!
{{comments.comment}}