தூண்!
Oct 20, 2026,01:45 PM IST
- சிவசத்தியா, காரைக்குடி
இழப்பினை யீடு செய்து
தாங்கி நிற்கும்
எதுவும் தூண்களே
இடுக்கன் களையும் நட்பாய்...
உயிர் தாங்கும்
தாயின் தொப்புள் கொடியாய்...
மழைத்துளி
இணைத்து
வான் பூமி எழுப்பும்
திரவத் தூணாய்...
தூணிலும்
துரும்பிலும்
இருந்தான்
மனிதத்துள்
இல்லை....
அன்புத்
தூண்களாய்
ஆர்ப்பரித்து
புவியெங்கும்...!