தூக்கம் - தியான நிலை (SLEEP is the Best Meditation)

Maitreyi Niranjana
Jan 16, 2026,11:01 AM IST

 - மைத்ரேயி நிரஞ்சனா


தூக்கம் என்பது ஒரு ஆழமான தியான நிலை.. ஆழ்ந்த தூக்கம் என்பது நம் எல்லாருக்கும் மிக அவசியமான ஒன்று.. செயற்கை விளக்குகள், கம்ப்யூட்டர் செல்போன்கள் இவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தூக்கம் குறைந்துவிட்டது என்று சொல்லலாம்..


நம் மனித குலத்திற்கு ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் தூக்கமின்மையே.. தூக்கம் ஒரு ஆழமான ரிலாக்சேஷன்.. (Relaxation) சிலருக்கு 5 மணி நேரம் தூக்கமே போதுமானதாக இருக்கிறது.. சிலருக்கு 8 மணி நேரம் தூங்க தேவை இருக்கலாம்.. அதேபோல் விழித்துக் கொள்ளும் நேரமும் ஒவ்வொரு வருக்கும் மாறுபடலாம்.. பொதுவாக சூரியன் உதிக்கும் நேரம் நிறைய பேருக்கு விழிக்கும் நேரமாக இருக்கும்.. நமது உடம்பின் வெப்பநிலை 3 மணி நேரம் குறைவாக இருக்கும்.. அந்த நேரத்தில் உறங்குவது மிக அத்தியாவசியம்.. அந்த நேரத்தில் விழித்தால்.. அன்றைய நாள் முழுவதும்.. களைப்பாக உணருவோம்..


சிலர் 5 மணிக்கு விழிப்பார்கள்.. சிலருக்கு ஏழு மணிக்கு விழிப்பது தேவையாக இருக்கும்.. சிலர் 4 மணிக்கு விழிப்பார்கள்.. நம்ம உடம்பின் பயோ கிளாக் (Bioclock) எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து அதன்படி நம் உறங்கினால் நம் உடம்பிற்கு மனதிற்கும் அதுதான் ஆரோக்கியம்..




ஆழ்ந்த தூக்கத்தில் உலகம் நமக்கு இல்லாமல் போய்விடுகிறது.. நாம் வைத்துக் கொண்டிருக்கும் பிளான்கள் காணாமல் போய்விடுகிறது.. நம்மைப் பற்றி நாம் வைத்துக் கொண்டிருக்கும் கிராண்ட் இமேஜ் காணாமல் போய்விடுகிறது.. நம்முடைய அரசியல் நிலைப்பாடு மத கோட்பாடுகள் (எவற்றுக்காக உயிரைக் கொடுத்து நாம் சண்டை போட்டு கொள்கிறோமோ) எல்லாமே மறைந்து விடுகிறது..


ஆழ்ந்த தூக்கம் என்பது நாம் இயற்கையுடன் ஒன்றி இருக்கும் நிலை.. இந்தத் தூக்கம் ஆரம்பிக்கும்போது விழிப்புணர்வுடன் கவனித்தால்.. நமது மனத்தின் எண்ணங்கள் குறைய ஆரம்பிக்கும்.. உடம்பின் செயல்பாடுகளும் ஒவ்வொன்றாக ஓய்வு நிலைக்கு செல்லும்.. உடல் மனம் இரண்டும் முழுவதுமாக ஓய்வு நிலைக்கு செல்லும் போது.. நாம் யார் என்று புரிந்து கொள்ளும் ஆன்மீக சாத்தியம் உள்ளது.. 


ஆழ்ந்த தூக்கத்தில் நமக்கு எவ்வளவு விதமான கனவுகள் வருகின்றன.. நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு லாஜிக் லாக இருந்தாலும்.. எந்த லாஜிக்கும் இல்லாத கனவுகள் வருகின்றன.. அதுவும் அத்தியாவசியமே.. அன்றாட வாழ்க்கையில் நாம் அடக்கி வைக்கும் உணர்வுகள் அவை வெளிப்படுத்தும் வகையில் கனவுகள் நிகழ்கின்றன..


சிறிய கதையை பார்ப்போமா? 


காஷ்முஷ் அப்போது ஒரு ஆன்மீக குருவாக இருந்தார்.. 


ஒரு நாள் காலையில் எழுந்ததும் தன் சீடர்களிடம் புலம்பி அழ ஆரம்பித்தார்.. என்னவென்று கேட்ட போது.. தூக்கத்தில் ஒரு கனவு வந்தது என்றும் அதில் தான் ஒரு பட்டாம்பூச்சி ஆக மாறி விட்டதாக கூறினார்.. அது நிஜம் போலவே தோன்றியது.. இப்போது தான் காஷ்முஷ் ஆக இருப்பது நிஜம் போலவே தோன்றிகிறது.. 


பட்டாம்பூச்சியின் கனவில் காஷ்முஷ் ஆக இருப்பது நிஜமா .. காஷ்முஷ் கனவில் பட்டாம் பூச்சியாக இருந்தது நிஜமா தெரியவில்லை என்று புலம்ப ஆரம்பித்தார்.. உங்கள் கனவில் இதை படிக்கிறீர்களா அல்லது என் கனவில் நீங்கள் அனைவரும் வருகிறீர்களா? லாஜிக் சரிதான்.. 


எது வேண்டுமானாலும் நிஜமாக இருக்கலாம்.. இந்த குழப்பம் சரியே.. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. இது கனவா அது கனவா என்பதை விட.. யார் அந்த கனவு காண்பவர் என்று கவனித்து வருவது.. நாம் யார் என்று அறிந்து கொள்ள திறவுகோலாக இருக்கும்..


நாம் தொடர்வோம்..


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.