காலம் என்னும் இனிய மாயை (Time - A beautiful Illusion)

Jan 10, 2026,11:34 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நாளை என்பது கற்பனை என்று சொன்னால்.. “இல்லை! இல்லை.. நாளை எப்படியும் வரும்.. நாளைக்கு.. அடுத்த மாதத்தில்.. அடுத்த வருடத்தில் இதெல்லாம் பண்ண வேண்டும்.. அது எப்படி உண்மையில்லை என்றுதான் உங்களுக்கு தோன்றுகிறது..? எப்பவுமே, இப்போது.. இந்த க்ஷணம் மட்டுமே தான் நிஜம் என்று சொன்னால் இதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? இது உண்மையிலே நிஜம் என்று பார்க்க முடிகிறதா? 


அடுத்த க்ஷணம் என்பது கூட அது வரும்போது.. இந்த க்ஷணமாகவே வருகிறது..


நமது கடந்த காலம் என்பது ஒரு ஞாபகம் மட்டுமே.. It's a Memory.. நம் நிகழ்காலம்.. கடந்த காலத்தின் நினைவுகளில் இருந்து நிகழ்வதாக இருந்தால்.. நமது எதிர்காலமும் அந்தக் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும்… காலச்சக்கரம் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.. அந்த காலச்சக்கரம் என்பது ஒரு வட்டம்.. 

 நாமும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறோம்.. சில விஷயங்கள் திரும்பத் திரும்ப நடப்பது போல் நமக்கு தோன்றுவது அதனால் தான்.. 




எப்போது கடந்த காலத்தை நினைவுகளாக மட்டும் நமக்கு பார்க்கத் தெரிகிறதோ.. எப்போது நம் நிகழ்காலத்தில் இருக்க ஆரம்பிக்கிறோமோ.. அப்போதுதான் எதிர்காலம்.. நிகழ்காலத்தில் இருந்து நடக்க ஆரம்பிக்கும்.. அதுதான் காலச்சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி.. நிகழ்காலம்.. என்பது காலம் இல்லை உண்மை என்று உணர ஆரம்பிப்போம்..


கடிகார நேரம் என்பது ஒரு சமுதாயத்தின் தேவை அதற்காக மட்டுமே ஒரு நாளை 24 மணி நேரமாக பிரித்து ஒரு மணி நேரத்தை 60 வினாடிகள் ஆக பிரித்துள்ளோம்.. பூமி சுற்றுவதை பார்த்து 24 மணி நேரம் என்று உருவாக்கினோம்.. மேலும் அதை 60 நிமிடங்கள் என்று பிரித்தோம் அதை 100 நிமிடங்கள் என்று கூட கொள்ளலாம்.. கடிகார காலம் என்பது ஒரு சமுதாயத்தின் தேவை.. அதை கூட பிரேக்ஃபாஸ்ட் டைம்.. டின்னர் டைம் என்று சொல்லி.. அந்த  நேரத்திற்கு சாப்பிட்டே ஆக வேண்டும் டீ டைம் என்றால் டீ குடித்தே ஆக வேண்டும் என்று வாழப்பழகி உள்ளோம்.. 


ஆனால்  அந்த நேரத்துக்கு நமக்கு பசிக்கிறதா.. நமக்கு தாகம் இருக்கிறதா என்று நாம் கவனத்தில் கொள்வதில்லை.. 

நமது உடம்பில் கூட ஒரு கிளாக் (Bioclock) இருக்கிறது.. பெண்கள் இதை நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.. 28 நாட்களுக்கு ஒரு முறை.. ஒரு சுழற்சி நடப்பதை அறிவோம்..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா? 


காஷ்முஷ் ஒரு சாலையில் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு கார் அவரை இடித்துச் சென்று விட அவர் கீழே விழுந்து விடுகிறார்.. மயக்கம் அடைந்து விடுகிறார்.. அப்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடி விடுகிறது.. 


அப்போது ஒரு மருத்துவர் அந்த பக்கம் வர அவர் காஷ்முஷை சோதனை செய்து பார்க்கிறார்.. பிறகு சொல்கிறார் ஐயோ இவர் இறந்துவிட்டார் என்று..


காஷ்முஷ் மெதுவாக “இல்லை இல்லை” என்று முனகுகிறார்.. அப்போது அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் சே..சே.. என்ன சொல்கிறாய்? டாக்டர் சொல்வது தான் சரி என்று சொல்கிறார்.. 


இது எப்படி இருக்கு? 


 ஆதி கால மனிதன் இப்போது இருந்தால் அவன் கடிகாரத்தை ஒரு தேவையற்ற பொருளாக தான் பார்ப்பான்.. 

இந்த க்ஷணத்தில் இருக்க விழிப்புணர்வு மட்டுமே நமக்கு வேண்டும்.. நாளைக்கு தேவையான பயணத்திற்கு வாங்க வேண்டிய டிக்கெட் கூட இந்த நிகழ் காலத்தில் மட்டுமே வாங்குகிறோம்.. 


நிகழ் காலம் மட்டுமே உண்மை என்ற உணர்தல்.. நாளை என்பது கற்பனை என்ற அறிதல்.. நம்மை விழிப்புணர்வுடன் வாழ வைக்கும்.. நம்மில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கான சாத்தியமும் அத்துடன் நடக்கிறது.. 


நாம் தொடர்வோம்..


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்