வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் (Life Is a Celebration)

Jan 02, 2026,09:49 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. எந்த நாளை கொண்டாடுகிறோம் என்பதை விட கொண்டாடுதல் என்பது மிக தேவையான விஷயம். 


மற்ற நாட்களை விட ஹோலி அன்றோ.. தீபாவளி அன்றோ.. நாம் நம்முடைய எல்லைகளை உடைத்து டான்ஸ் ஆடுகிறோம்.. பாடுகிறோம்.. இந்த எல்லைகளை உடைத்தல் கொண்டாட்டத்தில் மட்டுமே நடக்கிறது.. மற்ற நாட்களில் கவலைகளை சுமந்து கொண்டிருப்பதால் கொண்டாடும் நாட்கள் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது..


சில பேர் கொண்டாடுவதற்கு காரணம் தேவை இல்லை.. கொண்டாட்டம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.. கொண்டாட்டம் என்பது வெளிப்புற தோற்ற நிலை இல்லை.. அது நம்முடைய உள்நிலை (State of Being) 




அது கடவுள் நிலை.. மரங்களும் ஆறுகளும் செடிகளும் பூக்களும் எப்போதுமே   கொண்டாட்டத்தில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறதா? 


கடவுள் நிலை தென்றலை(Like a Breeze) போன்றது.. அது புயல் காற்றை போல நம்மை தாக்குவதில்லை..  நாம் தண்ணீரை போல் fluid state ல் இருக்கும்போது தான் அது நம்மை தொட முடியும்..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா ?


காஷ்முஷ் அப்போது ஒரு வக்கீலாக இருந்தார்.. அவர் ஒரு தீவிரமான நாத்திகன்.. அதனால் தன்னுடைய அலுவலகத்திலும் வீட்டிலும் ‘God is Nowhere’ என்று எழுதி வைத்திருந்தார்.. அதைப் பார்த்து யாரேனும் அவரிடம் விவாதம் பண்ண ஆரம்பிப்பார்கள்.. அவருக்கு அது பிடித்தமான பொழுதுபோக்கு அவரும் கடவுள் இல்லை என்று தீவிரமாக விவாதிப்பார்.. 


அவரது மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது.. அந்த குழந்தையுடன் விளையாடுவதில் அவருக்கு பேரானந்தம்.. அந்த குழந்தை படிக்கும் வயது எட்டியது.. ஒரு நாள் அவர் மடியில் அமர்ந்து கொண்டு அவர் எழுதி வைத்திருந்த வாக்கியத்தை படிக்க வேண்டும்.. God is… படித்துவிட்டது. Nowhere என்ற வார்த்தை நீளமாக இருந்த காரணத்தினால்.. அதைப் பிரித்து Now Here என்று படித்தது.. அதைக் கேட்ட காஷ்முஷ் அதிர்ந்து போனார்.. அந்த குழந்தையின் கண்களை உற்று நோக்கினார்.. அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது..(Something mysterious touched him) அவர் கண்களில் இருந்து தரை தரையாக கண்ணீர்.. வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு நிலை.. Now Here..Now Here என்று திரும்பத் திரும்ப சொன்னார்.. கடவுளை நம்ப ஆரம்பித்த அந்த தருணம்.. இதை படிக்கும் போது உங்களுக்கு புல்லரிக்கவில்லையா.. எனக்கும் ஏனோ கண்ணீர்..


நாம் சிரிக்கும் போது கண்ணீர் வந்துவிடுகிறது.. ஏன் அப்படி ஆகிறது? ஏனென்றால் நாம் திறந்த நிலையில்…அனுமதிக்கும் நிலையில் (In a state of receptivity) இருக்கிறோம்.. திறந்த நிலையில்.. ஒன்றை அனுமதித்து மற்றொன்றை அடக்கி வைக்க முடிவதில்லை.. கோபத்தை அடக்கி வைப்பவனுக்கு கருணை என்ற நிலை வருவதற்கு வாய்ப்பில்லை.. அதேபோல் தன் வயிற்றிலிருந்து சிரிக்க முடியாதவனுக்கு.. அழுகை வாய்ப்பில்லை.. 


நாம் சிறுவயதிலிருந்து அடக்குவதற்கு பழகி இருக்கிறோம்.. ஆண் பிள்ளைகளுக்கு அழக்கூடாது..நீ ஆண்  பலமாக இருப்பவன் என்றும் பெண்களுக்கு மரம் ஏறக்கூடாது ஆண் விளையாடுவது போல் விளையாடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறோம்.. 


மனிதன் என்பவன் ஆண் தன்மையும் பெண் தன்மை ஒரு சேர கொண்டிருக்கும் உயிர்.. Lao Tzu என்று ஒரு ஞானி தன் ஆண் சீடர்களுக்கு சொல்லும் விஷயம்.. உன்னில் இருக்கும் ஆண் தன்மையை சாப்பிட்டு விடு..(Eat / Absorb) பெண் சீடர்களுக்கு பெண் தன்மையை சாப்பிட்டு விடு..அது நடுநிலைத் தன்மை.. ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத நடுநிலைத் தன்மை..


கடவுள் நிலை.. கொண்டாடும் நிலை.. தினமுமே வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழும் நிலை.. அப்போது வேலை என்பது விளையாட்டு.. அன்பு என்பது வழிபாடு.. மகிழ்ச்சி என்பது நம் நிலை..


நாம் தொடருவோம்.


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்