யோகிகளின் வாழ்க்கை தத்துவம் (Jesus Consciousness)

Dec 25, 2025,10:46 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.. 


கிறிஸ்துவுக்கு முன் / கிறிஸ்துவுக்குப் பின் இன்று காலத்தை இரண்டாக பிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…

அது கிறிஸ்து என்னும் யோகிக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.. ஆனால் அவரும் சரி.. புத்தரும் சரி சொன்ன விஷயம் பழமை என்னும் மூட்டையை தூக்கி சுமக்காதீர்.. 


புத்தர் தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன விஷயம் தனக்கு சிலை வைத்து வழிபடக் கூடாது என்று..  ஏனெனில் புத்தர் தான் கடந்த காலமாகி விட்ட பிறகு.. அதை நினைத்து தன் வழி வந்தவர்கள் வாழக்கூடாது என்று நினைத்தார். 


கிறிஸ்துவும் ( Leave the dead to the dead)  கடந்த காலத்தை அத்துடன் விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வாழ சொன்னார்.. கடந்த காலத்தில் வாழ்ந்த சிலரை நாம் கடவுள் என்று ஏற்றுக் கொள்வது எளிதான விஷயம்.. கிருஷ்ணா.. ராமர்.. புத்தர்..இயேசு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. ஏனெனில் நிறைய மக்கள் (Majority) அவர்கள் கடவுள் என்று நம்ப ஆரம்பித்தார்கள்.. அந்த நம்பிக்கையை பின்பற்றி வாழ்வது எளிது.. ஆனால் ஒவ்வொரு நொடியும் கான்ஷியஸாக விழிப்புணர்வுடன் வாழ்வது நமக்கு கடினம்.. அதனால் இறந்த காலத்தை பிடித்துக் கொள்கிறோம்.. அவர்களுக்கும் நமக்கும் பொதுவான விஷயம் விழிப்புணர்வு மட்டுமே.. Krishna consciousness .. Jesus Consciousness என்று கூறினால் அதில் இருக்கும் பொதுவான விஷயம் Consciousness.. 


ஆதிசங்கரர் இந்த உலகம்..அதன் தோற்றம் ஒரு மாயை என்று கூறுகிறார்.. இந்த உலகம் உன்னுடைய வெளிப்பாடு.. உன்னுடைய கண்ணாடி தோற்றம்.. நாம் எப்படி இருக்கிறோம் என்பதை இது பிரதிபலிக்கிறது.. நம் உறவு முறைகள் நம்மை பிரதிபலிக்கிறன.. Our relationship with people or money or anything and everything reflect us.. இதை உணராமல் இந்த மாற்றம் நம்மிடம் வராமல் நாம் குடிசையில் இருந்து மாளிகைக்கு சென்றாலும்.. ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு சென்றாலும் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை.. ஏனெனில் உள்நிலை மாற்றம்(Inner transformation) மட்டுமே நம்மை துன்பத்திலிருந்து விடுவிக்கும் வழியாக உள்ளது.. 


ஒரு சிறிய கதையை பார்ப்போமா?




காஷ்முஷ் புத்தரிடம் சில காலம் சீடராக இருந்தார்..  அப்போது புத்தர் தன் சீடர்களை உலகத்தின் பல பாகங்களுக்கும் தன்னுடைய அஹிம்சை வழி வாழ்முறையை பரப்புவதற்காக அனுப்பி கொண்டு இருந்த காலம்.. காஷ்முஷ் புத்தரிடம் தான் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய ஊருக்கு செல்வதாக கூறினார்.. அடடா அந்த ஊரில் வாழும் மக்கள் அதிதீவிரவாதிகள் அன்றோ? அப்போது புத்தர்  நீ என்னுடைய மூன்று கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் அந்த ஊருக்கு செல்லலாம் என்று சொன்னார்..


அவர்கள் உன்னை திட்டி இழிவு படுத்தினால் நீ என்ன செய்வாய் என்று கேட்க காஷ்முஷ் கூறினார்.. ‘நான் சந்தோஷப்படுவேன்..’

ஏன் என்று புத்தர் கேட்க.. அவர்கள் சில வார்த்தைகளைத்தானே கூறினார்கள் என்னை அடிக்கவில்லை அல்லவா என்று பதில் கூறினார்.. 


அடுத்த கேள்வியாக அவர்கள் உன்னை அடித்து விட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்க காஷ்முஷ் ‘நான் சந்தோஷப்படுவேன்’ என்று கூறினார்.. புத்தர் ஏன் என்று கேட்க.. காஷ்முஷ் அவர்கள் என்னை அடித்தார்களே ஒழிய என்னை கொல்லவில்லை அல்லவா? அத்துடன் நம் வாழ்க்கை முறையான அகிம்சையை அவர்கள் எடுத்து சொல்ல இதைவிட வேறு வாய்ப்பு உண்டா என்று கூறினார்..


அடுத்த கேள்வியாக அவர்கள் என்னை கொலையை செய்து விட்டால் என்ன செய்வாய் என்று கேட்க.. காஷ்முஷ் நான் சந்தோஷப்படுவேன் என்று கூறினார்.. ஏன் இன்று புத்தர் கேட்க.. இந்த உடல் என்னும் சிறையில் இருந்து என்னை விடுவித்ததற்காக நான் சந்தோஷம் அடைவேன் என்று கூறினார்..


அப்போது புத்தர் இந்த பூவுலகம் உனக்கு சொர்க்கமாக மாறிவிட்டது.. இப்போது நீ எங்கு வேண்டுமானால் செல்லலாம் என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்.. 


இந்த உலகத்தை சொர்க்கமாக மாற்றிக் கொள்வது நம்முடைய சாய்ஸ்.


Merry Christmas & Wishing you a very Happy New Year.. 


நாம் தொடர்வோம்..


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

சூழல்கள் நம்மை சரி செய்யும்.. எதிர்பாராத தருணத்தில்.. THE MORE I LEARN!

news

அந்தப் பக்கம் போகாதீங்க.. AM I SCARED"?

news

மெல்ல தடதடக்கும் மனிதநேயத்தின் இதயத் துடிப்பு.. Humanity!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

ஒவ்வொரு துணியும்.. ஒவ்வொரு மாணவ மணியாய்.. !

news

பனி படர்ந்த தாடியுடன் ஒரு முதுபெரும் ஞானி.. Santa's Celestial Chariot: A Yuletide Overture!

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்