சென்னை: வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, தனது திறனற்ற நிர்வாகத்தால் முறையான வசதிகளின்றியும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலும் சீரழிந்து வரும் ஊரக நிர்வாகத்தை மேலும் சிதைக்கும் வண்ணம், ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா?
தேர்தல் நெருங்கியதும் ஏனோதானோவென அவசரகதியில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, பெருமை பீற்றிக் கொள்வதில் காட்டிய அக்கறையில் சிறு துளியேனும் அதனைச் செயல்படுத்துவதிலும், அனைத்துத்தரப்பட்ட ஊழியர்களை இணைப்பதிலும் அக்கறை காட்டாத அறிவாலய அரசை, இனி என்றும் அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள்! போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக அரசுக்குத் தேர்தலில் ஏமாற்றத்தைப் பரிசளிப்பர் என்று தெரிவித்துள்ளார்.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}