பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

Feb 09, 2026,05:39 PM IST

டில்லி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாம்பழ சின்னம் மற்றும் கட்சியின் உரிமை தொடர்பான சட்டப் போராட்டத்தில், அன்புமணி தரப்பிற்குச் சாதகமான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் மூலம் கட்சியின் அங்கீகாரம் தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு ஒரு முக்கிய முடிவு கிடைத்துள்ளது.


பாமகவின் தலைவர் அன்புமணியின் பெயரிலேயே கட்சி அலுவலகம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரே கட்சியின் தலைவர் என தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியதை எதிர்த்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஜி.கே. மணி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை தலைவராக அங்கீகரித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஜி.கே. மணி தரப்பிற்குச் சாதகமான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.




இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தனது தரப்பு நியாயங்களை மிகத் தெளிவாக முன்வைத்தது. கட்சியின் உரிமை கோரல் தொடர்பான சிக்கல்கள் எழுவதற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.உள் கட்சித் தேர்தல் மற்றும் விதிமுறைகளின் படியே அன்புமணி ராமதாஸுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. முறையான ஆவணச் சான்றுகள் இன்றி இந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் கூறி இருந்தது.


தேர்தல் ஆணையத்தின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், பாமக தொடர்பான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரம் செல்லும் என்பதையும், அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கே கட்சியின் அதிகாரம் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.


தமிழக அரசியலில் மிக முக்கியமான கட்சிகளில் ஒன்றான பாமகவில் நிலவி வந்த இந்தத் தலைமைப் போட்டி, தற்போது சட்ட ரீதியாக ஒரு தெளிவைப் பெற்றுள்ளது. வரும் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.இந்தத் தீர்ப்பின் மூலம் பாமகவின் அதிகாரப்பூர்வ தலைமை அன்புமணி ராமதாஸ் தான் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்

news

தனிமை

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்