விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

Feb 09, 2026,05:40 PM IST

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளன.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது தனது அரசியல் நகர்வுகளை நிதானமாகவும் கவனமாகவும் மேற்கொண்டு வருகிறார். இது குறித்துப் பேசிய செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய் பேசினால், எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்” என்று மிக ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.




விஜய் எப்போது பேசுவார் என்ற எதிர்பார்ப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், "எதை, எப்போது, எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அப்போது விஜய் பேசுவார். அதற்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் நாளாக அந்த நாள் அமையும்" என்று அவர் குறிப்பிட்டார். விஜய்யின் அரசியல் வருகை வெறும் மாநில அளவிலான மாற்றத்தை மட்டுமல்லாமல், தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்கும் என்பதில் தவெக உறுதியாக இருப்பதை இது காட்டுகிறது.


தவெக-வின் வாக்கு வங்கி குறித்த அதிரடி தகவலை செங்கோட்டையன் பகிர்ந்துள்ளார். தற்போது டெல்லி (மத்திய அரசு) தவெக-வை கண்டு பயப்படுகிறது. அதற்கு எந்தவொரு கூட்டணியும் இல்லாமல், தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனித்தே 42 சதவீத வாக்குகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற எல்லா கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்தாலும் கூட, அவர்களால் 40 சதவீத வாக்குகளைக் கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை என்று அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.


இந்த புள்ளி விவரங்கள் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி நகரும் வேளையில், தவெக ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதை இக்கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்