அன்னையைப் போற்று

Aug 14, 2026,05:35 PM IST
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை 

குறில் நெடில் ஒற்றில் இணைந்த ஒற்றைச்சொல்...
அம்மாவோ அன்னையோ ஆருயிரில் கலந்தவள்...

வைகறைப் பொழுதினிலே வையகமே தூங்கையிலே....

வாரிச்சுருட்டித்  தான் எழுந்து வளையொலிக்க வேலை செய்வாள்...
 
பக்குவமாய்த் தான் சமைத்துத் தேவையறிந்து பசியாற்றிடுவாள்...

 

மழலையோ வாலிபமோ தன் மகவென்று மகிழ்ந்திடுவாள் ....

அன்புடன் அரவணைப்பும் கனிவுடன் கண்டிப்பும் காட்டிடுவாள் ....

சோர்வென்று சாய்ந்து விட்டால் தோள் கொடுத்துத் தாலாட்டிடுவாள் ...

 குடும்பம் என்னும் பிணைப்புச் சங்கிலி பிளவுபடாது இணைத்திடுவாள் ...
 
ஆழ்கடலின் புதையலென அற்புதங்கள் நிறைந்தவள்....

அன்போடு கவனிக்க அவசரத்தில் மறந்தீரோ ?

உறவுகளின் பாரத்தைத் தூணாய்த் தாங்கிடுவாள்...

உண்மையின் வழி நின்று விழியாய் ஒளி தருவாள்

உத்தமி படும்பாடு உலகோரே அறிவீரோ ?

இன்றாவது உணர்ந்திடுவீர்!
ஓய்வறியாது உழைத்திருக்கும்...

அன்னையரை இதயத்தில் வைத்துப் போற்றிடுவீர் !

(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்