- பாரதிராஜன்
காசேதான் கடவுளடா
அருமையான நகைச்சுவை படம். என்சகோதரி கல்யாணம் 18/6/1972 ல் காஞ்சீபுரத்தில் நடந்தது. நானும் என் சகோதரனும் திருமணத்திற்கு முதல் நாள் , திருமணத்தன்று தொடர்ந்து ஒரே அலைச்சல். திருமணத்திற்கு மறுநாள் காஞ்சிபுரம் ராஜா தியேட்டரில் காசேதான் கடவுளடா திரைப்படம் பார்க்க குரூப் ஆகச் சென்றோம்.
இரவு10/00 மணி காட்சி, டீக்காரரிடம் டீ வாங்கி குடிக்க நினைத்து கீழே வைத்து விட்டோம் திரையில் அப்போது இன்று வந்த இந்த மயக்கம் பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது, இரண்டு நாட்களாக அலைச்சல் காரணமாக சற்றே கண்ணயர்ந்து அதனால் டீ முழுவதும் கீழே கொட்டி டீ கிளாஸ் உடைந்து விட்டது.
டீ பையன் வந்தான் அவனிடம் சொன்னதும், எங்களை கடைக்காரரிடம் கொண்டு போய் தகவல் தெரிவிக்க கடைக்காரர் டீ கிளாஸ் க்கு ரூபாய் 20/-, தரும் படி கேட்க , நான் டீ கூட குடிக்கவில்லை, அதை டீ பையனிடம் சொல்லுங்கள் என்றார்.

பணம் இல்லையா, கையில் கட்டி யிருந்த வாட்சை கழட்டி கொடுத்து விட்டு நாளை காலை பஜாரில் உள்ள ராயல் ஸ்டோரில் வாங்கி கொடுத்து விட்டு வாட்சை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தார்
வேறு வழியின்றி ரூபாய் 20/+ டீ க்கான காசு கொடுத்து விட்டு வந்தோம். எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் நினைவுக்கு வரும்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
மறவோம் பெருந்தலைவரை.. விருதுநகரின் வீர நாயகனை!
When anyone lies they will face the consequences
சமையல் With ஸ்வர்ணா: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
{{comments.comment}}