- புரட்சிப் புயல் தே. ஜெனிட்டா ரீனா
விருதுநகரில் பிறந்த வீர நாயகனே!
சிறுவயதில் பள்ளிப் படிப்பைத் துறந்தவரே!
தாய்மாமனிடம் அடைக்கலம் புகுந்து தங்கியவரே!
விடுதலைப் போராட்ட வீரர்களால் ஈர்க்கப்பட்டவரே!
நாட்டின் விடுதலையில் வேட்கை கொண்டவரே!
அரசியல் பிரச்சாரங்களால் அதிர்ந்த மேடையிலே,
போராட்டங்களில் பங்கெடுத்துச் சிறை சென்றவரே!
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்றவரே!
தமிழ்நாட்டின் முதல்வராய்த் தலையெழுத்தை மாற்றியவரே!
எளிமையின் வடிவமாகத் திகழ்ந்த தலைவரே!
சிற்றூர்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கியவரே!
மதிய உணவுத் திட்டத்தால் பசியைப் போக்கியவரே!
ஏழைகளுக்கு உணவுடன் கல்வியை அளித்தவரே!

பொதுத்துறை நிறுவனங்களைத் தமிழகத்தில் நிறுவியவரே!
நீர்ப்பாசனத் திட்டங்களை வகுத்து வடிவமைத்தவரே!
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி அமைத்தவரே!
பல தலைவர்களை உருவாக்கிய கிங் மேக்கரே!
உன் புகழ் என்றும் ஓங்கி வளரட்டும்!
மக்கள் மனதில் என்றும் வாழ்பவரே!
உம் உடல் மறைந்தாலும் உம் நினைவுகள்,
என்றும் பசுமரத்தாணி போல மக்கள் மனதில் வாழ்கின்றன!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
Short Story: "மே...மே"
பேசும் தெய்வம்
மறவோம் பெருந்தலைவரை.. விருதுநகரின் வீர நாயகனை!
When anyone lies they will face the consequences
சமையல் With ஸ்வர்ணா: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
{{comments.comment}}