Bharathirajan Short Story: நம்பிக்கை பொய்க்கவில்லை!

Aug 13, 2026,01:09 PM IST

- பாரதிராஜன்


இந்த கதையின் நாயகன் மாதவன் ஒரு அரசு ஊழியர். அழகான குடும்பம் மனைவி நந்தினி, வேலைக்கு போகவில்லை. மகன் சந்தோஷ் பள்ளி மாணவன்.எல்லாம் நன்றாக போய் க்கொண்டிருந்தால் எப்படி?


மாதவன் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வரும் போது ரொம்ப அசதியாக வந்தான். மறுநாள் மருத்துவமனை சென்ற போது மாதவனுக்கு இருதயநோய் இருப்பது தெரிய வந்தது. அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு நிறைய பணம் தேவை என்று தெரிந்து கொண்டார்.


அலுவலகத்தில் இன்சூரன்ஸ் மூலம் சுமார் 2,00,000/ அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மேற்பட்ட செலவுகளை எப்படி சமாளிப்பது என்று மாதவன் மற்றும் அவன் மனைவிக்கும் ஒரே கவலையாகிவிட்டது. என்ன செய்வது என்று ஒரே யோசனை. அறுவைசிகிச்சைக்கு அலுவலகம் இன்சூரன்ஸ் மூலம் பணம் வரும் அதற்கு பின் சமாளிக்க என்ன செய்வது என்று தெரியவில்லை?


மாதவன் அவன் அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் நண்பர்களுக்கு உதவுவது வழக்கம். பணத்தாலூம் சரீர உதவி மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி , உதவித்தொகை க்கு எப்படி விண்ணப்பிப்பது என்று உதவுவது போன்றவைகளை பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்வது வழக்கம். அதுமட்டுமல்ல வலது கை செய்வது இடது கை தெரியாமல் செய்யும் பழக்கம் உண்டு மாதவனுக்கு.


அவன் அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் நண்பரின் மகள் திருமணத்திற்கு பண உதவி செய்தான். அவருக்கு இப்போது பணம் வந்து இருக்கும். எனவே அவரிடம் பணம் திரும்ப கேட்டு பெற மனைவி நச்சரித்தாள். வேண்டாம் பணம் வரும் என்று மாதவன் சொல்லி விட்டான்.         


மாதவனுக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் மாதவன் நண்பன் வந்து உடல் நலம் பற்றி விசாரித்து சென்றான். மாதவன் தன் உடல் நிலை பற்றி மட்டுமே பேசினான். பணம் பற்றி பேசவில்லை. அவன் நண்பன் சென்ற பின்னர் மாதவன் மனைவி மாதவனை முறைத்தாள்.




பின்னர் கல்லூரியில் இருந்து வந்த மாதவன் மகன் அப்பா நீங்கள் எப்போது என் கல்லூரிக்கு வந்து பீஸ் கட்டினீர்கள் என்று கேட்ட போது தான் மாதவனுக்கு அவன் நண்பன் மாதவன் மகன் படிக்கும் கல்லூரி பற்றிய விவரங்கள் கேட்டது நினைவில் வந்தது.


மாதவன் நண்பன் நம்பிக்கை துரோகம் செய்யாமல் மாதவனிடம் மகனின் கல்லூரி படிப்பு க்கு பணம் கட்டினான் என்று மாதவன் மற்றும் அவன் மனைவிக்கும் புரிந்தது.     


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்